Home> Lifestyle
Advertisement

BHU பல்கலை., துணை வேந்தராகும் JNU பல்கலை., பேராசிரியர்!

வாரணாசி பனாரஸ் இந்து பல்கலைக்கழக துணை வேந்தராக ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் ராகேஷ் பட்நாகர் நியமிக்கப்பட்டுள்ளார்!

BHU பல்கலை., துணை வேந்தராகும் JNU பல்கலை., பேராசிரியர்!

வாரணாசி பனாரஸ் இந்து பல்கலைக்கழக துணை வேந்தராக ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் ராகேஷ் பட்நாகர் நியமிக்கப்பட்டுள்ளார்!

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் துணை வேந்தாரக கூடுதல் பொருப்பில் இருந்த நீராஜ் திரிபாதி-யிடம் இருந்து பொறுப்பினை பட்நாகர் பெற்றுக்கொள்கிரார் என்பது குறிப்பிடத்தக்கது.

BHU துணை வேந்தராகும் பத்நகர் JNU  பல்கலை கழகத்தில் இரண்டு ஆண்டுகாலம் பேராசிரியராக இருந்தார். மேலும் குமாவோன் பல்கலைக் கழகத்தில் 2012-ஆம் ஆண்டு முதல் 2013-ஆம் ஆண்டு வரை துணை வேந்தராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த வாரம் ஆரம்பத்தில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் பட்நாகரின் நியமனத்தை குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டார் என பல்கலை கழக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கல்லூரி வளாகத்தில் நிலவி வந்த கடுமையான சிக்கலைத் தொடர்ந்து, நீராஜ் திரிபாதி தற்போது பதிவியில் இருந்து விடுவிக்கப் படுகின்றார். மேலும் இன்னும் 2 மாத காலத்தில் இவரது பதவிகாலம் முடிவடையவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு பதிலாக பதவியேற்றவுள்ள ராகேஷ் பட்நாகர் JNU பல்கலை கழகத்தில் இருந்து வருகிறார். சமீபத்தில் JNU வாழ்க்கை அறிவியல் துறை பேராசிரியர் தல் ஜோஹரி மீது பாலியல் சீண்டல் வழக்கு தொடரப்பட்டு, மாணவர்களால் தொடர் போராட்டம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது!

Read More