Home> India
Advertisement

JEE Main 2021, NEET 2021 Update: விரைவில் வெளிவரவுள்ளன தேர்வு அட்டவணைகள்

பொறியியல் நுழைவுத் தேர்வான ஜே.இ.இ-மெயின்சுக்கான மீதமுள்ள இரு  தேர்வுகள் மற்றும் மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் ஆகியவற்றின் அட்டவணையை மத்திய கல்வி அமைச்சகம் விரைவில் வெளியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

JEE Main 2021, NEET 2021 Update: விரைவில் வெளிவரவுள்ளன தேர்வு அட்டவணைகள்

JEE Main 2021, NEET 2021 Update: 

கொரோனா பெருந்தொற்றால் பெரிதும் பாதிக்கப்பட்ட துறைகளில் கல்வித் துறையும் முக்கியமான ஒரு துறையாகும். நிச்சயமற்ற நிலை, தேர்வுகள் நடக்குமா நடக்காதா என்ற குழப்பம், மதிப்பெண்கள் பற்றிய அச்சம், மதிப்பீட்டு முறை பற்றிய கவலை என பல வித இன்னல்களால் மாணவர்கள் அழுத்தத்தில் உள்ளனர். 

பொறியியல் நுழைவுத் தேர்வான ஜே.இ.இ-மெயின்சுக்கான (JEE Mains) மீதமுள்ள இரு  தேர்வுகள் மற்றும் மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் ஆகியவற்றின் அட்டவணையை மத்திய கல்வி அமைச்சகம் விரைவில் வெளியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பி.டி.ஐ அறிக்கையின்படி, ஆகஸ்ட் 1 ஆம் தேதி தேர்வுகளை நடத்த முடியுமா என்பது குறித்து நிலைமை பரிசீலிக்கப்பட்டு வருகின்றது. 

"JEE-Mains இன் நிலுவையில் உள்ள  இரண்டு தேர்வுகளை நடத்துவது குறித்தும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி NEET-UG ஐ நடத்த முடியுமா என்பது குறித்தும் தீர்மானிக்க நிலைமை மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளது" என்று ஒரு மூத்த அதிகாரி PTI இடம் கூறினார்.

ALSO READ:BREAKING: 12-ஆம் வகுப்பு மதிப்பெண் கணக்கிடும் முறை குறித்து சிபிஎஸ்இ விளக்கம்

இந்த கல்வி ஆண்டு முதல் ஜே.இ.இ-மெயின்ஸ் தேர்வுகள் ஆண்டுக்கு நான்கு முறை நடத்தப்படுகின்றன. ஜே.இ.இ-மெயின்சின் முதல் தேர்வு பிப்ரவரி மாதமும், இரண்டாம் தேர்வு மார்ச் மாதம் நடந்து முடிந்தது. அடுத்த ஜே.இ.இ-மெயின்ஸ் தேர்வுகள் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் திட்டமிடப்பட்டிருந்தன. எனினும், கொரோனா வைரஸ் தொற்று மிக அதிகமானதால் அவை ஒத்திவைக்கப்பட்டன.

நீட்-யுஜி (NEET-UG) குறித்து எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில், மே 1 முதல் தொடங்கவிருந்த நீட் தேர்வுக்கான பதிவு கைவிடப்பட்டது.

கோவிட் நிலைமையைக் கருத்தில் கொண்டு ஜூன் 1 ஆம் தேதி ரத்து செய்யப்பட்ட 12 ஆம் வகுப்பு தேர்வுகளுக்கான மதிப்பெண் அட்டவணைக் கொள்கையை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) வியாழக்கிழமை அறிவித்தது. அடுத்தடுத்த நுழைவுத் தேர்வுகளுக்கான அட்டவணை விரைவில் முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ASO READ: மதிப்பீட்டில் திருப்தி இல்லை என்றால் மாணவர்கள் தேர்வு எழுதலாம்: CBSE செயலாளர்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Read More