Home> India
Advertisement

சந்திரயான்-3 விரைவில் விண்ணில் சீறிப் பாயும்: ISRO

நிலவின் தென்துருவம் யாரும் ஆய்வு செய்யாத மர்ம பகுதியாக உள்ள நிலையில், நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்யும் முயற்சியில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஈட்பட்டு உள்ளன. 

சந்திரயான்-3 விரைவில்  விண்ணில் சீறிப் பாயும்: ISRO

சந்திரனின் தென் துருவத்தில் விண்கலத்தை தரையிறக்கும் முக்கியமான தொழில்நுட்பங்களை நிரூபிக்கும் நோக்கில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தனது லட்சிய சந்திரயான் -3 திட்டத்தை ஜூலை மாதம் தொடங்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. நிலவின் தென்துருவம் யாரும் ஆய்வு செய்யாத மர்ம பகுதியாக உள்ள நிலையில், நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்யும் முயற்சியில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஈட்பட்டு உள்ளன. நிலவின் தென் துருவத்தில் கனிம வளங்கள் அதிகம் இருப்பதாக கூறப்படும் நிலையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ,  குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. 

இந்நிலையில், "சந்திராயன்-3 மிஷன் ஜூலை இரண்டாவது வாரத்தில் திட்டமிடப்பட்டுள்ளது" என்று விண்வெளித் துறையின் கீழ் பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட தேசிய விண்வெளி நிறுவனத்தின் மூத்த அதிகாரி வியாழக்கிழமை PTI இடம் தெரிவித்தார். இந்த ஆண்டு மார்ச் மாதம், சந்திரயான்-3 விண்கலம்  சோதனைகள் வெற்றிகரமாக முடிந்தது. விணகலம் ஏவுதலின் போது எதிர்கொள்ளும் கடுமையான அதிர்வு மற்றும் ஒலி சூழலைத் தாங்கும் திறனை உறுதிப்படுத்தும் அத்தியாவசிய சோதனைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன.

ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள SDSC SHAR இலிருந்து LVM3  மூலம் ஏவப்படும் சந்திரயான்-3 விண்கலம் மூன்று தொகுதிகளின் கலவையாகும் என்ற உண்மையைக் கருத்தில் கொண்டு, இந்தச் சோதனைகள் மிகவும் சவாலானதாக இருந்தது. உந்துவிசை, லேண்டர் மற்றும் ரோவர் ஆகிய மூன்றும் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டன.

சந்திராயன் 3 விண்கலத்தை  ஏவுவதற்கான கிரியோஜினிக் மற்றும் சோதனை ஓட்ட பணிகளை இஸ்ரோ மேற்கொண்ட இஸ்ரோ, தற்போது ஜூலை 2வது வாரத்தில் சந்திராயன் 3 விண்கலத்தை விண்ணில் செலுத்த திட்டமிட்டு உள்ளதாக இஸ்ரோ மூத்த அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்து உள்ளார். லேண்டர் மற்றும் ரோவரில் உள்ள தொழில்நுட்பங்களை பரிசோதிக்கும் பணி நடைபெறுவதாகவும், கடந்த முறை ஏற்பட்ட தோல்வியில் இருந்து பாடங்களை கற்றுக் கொண்டு பூமி மற்றும் நிலவின் சுற்றுவட்ட பாதைக்கு ஏற்ப ஆர்பிட்டரை நிலை நிறுத்தும் முயற்சிக்கான சோதனையில் ஈடுபட்டு உள்ளதாகவும் பெங்களூரு இஸ்ரோ தலைமையகத்தில் பணிபுரியும் மூத்த அதிகாரி தெரிவித்து உள்ளார்.

மேலும் படிக்க | வெற்றிகரமாக விண்ணில் சீறிப் பாய்ந்த LVM3 ராக்கெட்..! 36 செயற்கை கோள்களுடன் பயணம்..!

"சந்திரயான்-3 என்பது சந்திரயான்-2 வின் தொடர்ச்சியான மிஷன் ஆகும், இது சந்திர மேற்பரப்பில் பாதுகாப்பாக தரையிறங்குவதோடு, அங்கு உலாவம் பணியை மேற்கொள்ளும். இது லேண்டர் மற்றும் ரோவர் கட்டமைப்பைக் கொண்டுள்ளது" என்று இஸ்ரோ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சந்திராயன் திட்டத்தை உருவாக்கிய இஸ்ரோ, கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் சந்திராயன் 2 விண்கலத்தை நிலவின் தென்துருவத்தில் இறக்கி ஆராயும் பணியில் ஈடுபட்டது. இதற்காக LVM2 ராக்கெட் மூலம் சந்திராயன் விணகலம் நிலவுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், எதிர்பாராத தோல்வியை சந்தித்தது. நிலவின் தென்துருவத்தை அடைய குறுகிய இடைவெளியே இருந்த நிலையில், விணகலத்தினுடனான இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும், நிலவில் லேண்டர் விழுந்து நொறுங்கியதாக கூறப்பட்டது. எனினும், விண்கலத்தின் மற்றொரு பகுதியான ஆர்பிட்டர் நிலவின் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரோ கடந்த பல காலமாகவே சந்திரயான், மங்கள்யான் என்று தொடர்ச்சியாக விண்வெளித் துறையில் பல சாதனைகளைப் படைத்து வருகிறது. பல்வேறு ராக்கெட்களை விண்வெளிக்கு அனுப்பி சாதனை படைத்து வரும் ISRO, கடந்த மார்ச் 26 அன்று, ஒரே நேரத்தில் 36 ஒன்வெப் (OneWeb) சாட்டிலைட்களை அனுப்பி புதிய மைல்கல்லை எட்டியது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் இணைப்பை மேம்படுத்துவதற்கான OneWeb பணிகளுக்கு மிகப்பெரிய முதலீட்டாளரான பாரதி குளோபல் பெரிய அளவில் உதவி வருகிறது.

மேலும் படிக்க | 7th pay commission: அடி தூள்... 50% டிஏ, அடிப்படை ஊதியத்தில் எக்கச்சக்க ஏற்றம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Read More