Home> India
Advertisement

மோடிக்கு ஐடியா கொடுத்தது இவரா?

 பிரதமர் மோடி 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று திடீரென அறிவித்துள்ளார். கருப்பு பணத்துக்கு எதிராகவும், கள்ள நோட்டுகள் புழக்கத்தை கட்டுப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பிரதமர் மோடி கூறியிருந்தார். இந்நிலையில் இந்த முடிவுக்கு பின்னல் ஒரு நபர் உள்ளதாக தகவல் வந்துள்ளது. 

மோடிக்கு ஐடியா கொடுத்தது இவரா?

புதுடெல்லி:  பிரதமர் மோடி 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று திடீரென அறிவித்துள்ளார். கருப்பு பணத்துக்கு எதிராகவும், கள்ள நோட்டுகள் புழக்கத்தை கட்டுப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பிரதமர் மோடி கூறியிருந்தார். இந்நிலையில் இந்த முடிவுக்கு பின்னல் ஒரு நபர் உள்ளதாக தகவல் வந்துள்ளது. 

சில மாதங்கள் முன்பு, டெல்லியில் பிரதமரை சந்தித்து கருப்பு பணத்தை ஒழிக்க ஆலோசனை கூறிய அவருக்கு முதலில் 8 நிமிட அப்பாயின்மென்ட் கொடுக்கப்பட்டது. அவரது விளக்கத்தால் ஈர்க்கப்பட்ட மோடி, தொடர்ந்து ஆலோசனை நடத்த ஆரம்பித்ததன் விளைவு, இந்த சந்திப்பு 2 மணி நேரம் நீடித்தது.

இப்படி, பிரதமரையே வியப்பில் ஆழ்த்தி ஐடியா கொடுத்த அந்த நபர் பெயர் அனில் போகில். இவர் புனே நகரை சேர்ந்த நிதி ஆலோசகர். 000, 500 நோட்டுகளோடு 100 ரூபாய் நோட்டுகளையும் தடை செய்ய அனில் போகில் பிரதமரிடம் கோரிக்கை வைத்ததாக தகவல் வந்துள்ளது. 

Video Courtesy: ArthaKranti Channel

Read More