Home> India
Advertisement

இரோம் ஷர்மிளா-கெஜ்ரிவால் சந்திப்பு; ஷர்மிளாவுக்கு ஆதரவு

இரோம் ஷர்மிளா-கெஜ்ரிவால் சந்திப்பு; ஷர்மிளாவுக்கு ஆதரவு

டெல்லி முதல்வரை மணிப்பூரின் இரும்புப் பெண் இரோம் ஷர்மிளா சந்தித்து பேசினார்.

மணிப்பூரின் இரும்புப் பெண் என வர்ணிக்கப்படும் இரோம் சர்மிளா 2000-ம் ஆண்டு முதல் மத்திய அரசின் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதம் மேற்க்கொண்டார். அவரை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உயிர் வாழ வலுக்கட்டாயமாக குழாய் மூலம் மூக்கு வழியாக திரவ உணவு அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அறையே சிறைச்சாலை போல் ஆகிவிட்டது.

16 ஆண்டுகள் உண்ணாவிரதம் இருந்து வந்த இரோம் ஷர்மிளா, சமீபத்தில் போராட்டத்தை கை விட்ட அவர் மணிப்பூரில் ஜனநாயகம் இல்லை. எனவே அரசியலில் ஈடுபட உள்ளேன் என கூறியுள்ளார். 

இந்நிலையில் அவர் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து பேசினார். பிறகு கெஜ்ரிவால் கூறுகையில்:-  ஷர்மிளாவின் உறுதியை பாராட்டுகிறேன். அவரது கொள்கைக்கும், போராட்டத்திற்கும் நான் ஆதரவு அளிப்பேன் என்றார்.

Read More