Home> India
Advertisement

டெல்லியின் புதிய காவல் ஆணையாளராக சஞ்சய் அரோரா நியமனம்

IPS officer Sanjay Arora: சஞ்சய் அரோரா ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர். நவம்பர் 2021 முதல் ஐடிபிபியின் டிஜியாக சஞ்சய் உள்ளார்.

டெல்லியின் புதிய காவல் ஆணையாளராக சஞ்சய் அரோரா நியமனம்

டெல்லியின் புதிய காவல் ஆணையாளராக சஞ்சய் அரோரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போதைய டெல்லி காவல் ஆணையராக உள்ள ராகேஷ் ஆஸ்தானாவுக்கு ஏற்கனவே பதவி நீட்டிப்பு செய்திருந்த நிலையில் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். அதன்படி டெல்லியின் புதிய காவல் ஆணையாளராக சஞ்சய் அரோரா நியமனம் செய்யப்பட்டு உள்ளார். தமிழ்நாடு கேடரைச் சேர்ந்த சஞ்சய் அரோரா தற்போது சிஆர்பிஎப் சிறப்பு இயக்குநர் ஜெனரலாக மத்திய ரிசர்வ் போலீசில் பணியாற்றி வருகிறார். முன்னதாக இந்தோ-திபெத்தியன் எல்லை போலீஸ் டிஜிபியாகவும் நியமனம் செய்யப்பட்டு பணியாற்றினார்.

மேலும் படிக்க | அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து மனுக்கள் : மத்திய அரசு கேவியட் மனு தாக்கல்

கடந்த 1988 ஆம் ஆண்டு தமிழகத்தில் ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியில் சேர்ந்த அவர் தமிழக காவல்துறையில் பல்வேறு பதவிகளை வகித்தவர். சிறப்பு அதிரடி படை போலீஸ் சூப்பிரெண்டாக சந்தன கடத்தல் வீரப்பனை பிடிக்கும் பணியில் சிறப்புடன் செயல்பட்டதற்காக முதல்-அமைச்சரின் வீரதீர செயலுக்கான விருதும் பெற்றுள்ளார். 

தேசிய பாதுகாப்பு பணியில் பயிற்சி பெற்ற பின்னர் 1991 ஆம் ஆண்டு சிறப்பு பாதுகாப்பு படை அமைப்பதில் முக்கிய பங்காற்றியவர். எல்.டி.டி.இ. செயல்பாடுகள் நிறைந்த காலத்தில் முதல்-அமைச்சர் பாதுகாப்பு பணியில் இந்த சிறப்பு பாதுகாப்பு படை செயல்பட்டது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளாராகவும் பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர். 

மேலும் படிக்க | வெளிநாடுகளிலிருந்து இந்தியா வருபவர்களுக்கு மங்கிபாக்ஸ் சோதனை: அரசு அறிவிப்பு

fallbacks

மேலும் படிக்க | அக்னிபாத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு... மோடி சொல்வது என்ன?

கோவை நகர காவல் ஆணையாளராக 2002ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரை பணியாற்றி உள்ளார். விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.யாகவும், ஊழல் கண்காணிப்பு மற்றும் ஒழிப்பு துணை இயக்குனராகவும் அவர் பணிபுரிந்து உள்ளார். மேலும் ஜெய்ப்பூரில் உள்ள மாளவியா நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் அரோரா எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்டு 31ந்தேதி இந்தோ-திபெத் எல்லை காவல் படையின் டி.ஜி.யாக பதவியேற்ற அவர் ஜனாதிபதியின் காவல்துறை பதக்கம் ஐ.நா. அமைதி குழு பதக்கம் உள்ளிட்ட பல பதக்கங்களையும் பெற்றுள்ளார். 

மேலும் படிக்க | வெளிநாடுகளிலிருந்து இந்தியா வருபவர்களுக்கு மங்கிபாக்ஸ் சோதனை: அரசு அறிவிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More