Home> India
Advertisement

2014 முதல் சுதந்திர தினத்தில் மோடி அறிவித்த முக்கிய திட்டம் குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்

PM Independence Day Speech Analysis: கடந்த 9 முறை செங்கோட்டையில் மூவர்ணக் கொடியை ஏற்றிய பிறகு பிரதமர் மோடி பேசிய நேரம், அறிவித்த திட்டம், இதுவரை மேற்கொள்ளப்பட்ட பணிகள் என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள்.  

2014 முதல் சுதந்திர தினத்தில் மோடி அறிவித்த முக்கிய திட்டம் குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்

PM Modi Independence Day Speech Key Points: இந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடி 10வது முறையாக செங்கோட்டையில் மூவர்ணக் கொடியை ஏற்றினார். கடந்த 9 ஆண்டுகளில் சுதந்திர நாளில் செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றியப் பின் பிரதமர் மோடி பல புதிய திட்டங்களை அறிவிக்கப்படும். அவர் அறிவித்த முக்கியமான 25 திட்டங்களை குறித்து பகுப்பாய்வு செய்வோம். எந்த ஆண்டில் எந்த பெரிய திட்டம் அறிவிக்கப்பட்டது? இந்தத் திட்டங்கள் எப்போது தொடங்கப்பட்டன? இதுவரை திட்டங்களில் எவ்வளவு செய்ல்படுத்தப்பட்டு உள்ளன? இந்த திட்டங்களை நிறைவேற்ற ஏதேனும் காலக்கெடு விதிக்கப்பட்டதா? என்பதைக் குறித்து பார்ப்போம். ஜீ தமிழ் நியூஸ் சார்பாக நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறோம்.

ஆண்டு- 2014
பிரதமர் உரையின் நேரம்- 65 நிமிடங்கள்
முக்கிய அறிவிப்புகள் - ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறை, ஜன் தன் யோஜனா

அனைத்து வீட்டிலும் கழிப்பறை:
எப்போது தொடங்கப்பட்டது - 2 அக்டோபர் 2014
இத்திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் நிலவரம் - 2014 முதல், 11.68 கோடிக்கும் அதிகமான வீட்டுக் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத கிராமங்களின் எண்ணிக்கை 6.03 லட்சமாகவும், மாவட்டங்களின் எண்ணிக்கை 706 ஆகவும் அதிகரித்துள்ளது. திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை 35 ஆகும்.

ஜன் தன் யோஜனா:
எப்போது தொடங்கப்பட்டது - 28 ஆகஸ்ட் 2014
இத்திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் நிலவரம் - இன்று கிட்டத்தட்ட 100% குடும்பங்கள் இந்த திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த திட்டம் 60% கிராமப்புறங்களிலும், 40% நகர்ப்புறங்களிலும் செயல்படுத்தபட்டு உள்ளன. ஜன்தன் இணையதளத்தின்படி, 49.72 கோடி பேர் ஜன் தன் யோஜனா திட்டத்தில் சேர்ந்துள்ளனர். இதில் 2 லட்சம் கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க - Independence Day 2023 LIVE Updates: செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி

ஆண்டு- 2015
பிரதமர் உரையின் நேரம் - 86 நிமிடங்கள்
முக்கிய அறிவிப்புகள் - ஸ்டார்ட்அப் இந்தியா, ஒரு பதவி ஒரே ஓய்வூதியம்,

ஸ்டார்ட்அப் இந்தியா:
எப்போது தொடங்கப்பட்டது - 16 ஜனவரி 2016
இத்திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் நிலவரம் - வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி, நாட்டில் இதுவரை 99,380 ஸ்டார்ட்அப்கள் தொடங்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், 655,171 பயனர்கள் போர்ட்டலில் பதிவு செய்துள்ளனர்.

ஒரு பதவி ஒரே ஓய்வூதியம்:
எப்போது தொடங்கப்பட்டது - 7 நவம்பர் 2015
இத்திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் - சுமார் 25 லட்சம் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ஒரே பதவி ஒரே ஓய்வூதியத்தின் கீழ் பலன்கள் வழங்கப்படுகின்றன. இந்த ஓய்வூதியம் 2022 இல் திருத்தப்பட்டது. புதிய சட்டத்திருத்தத்தின்படி ராணுவ வீரர்களுக்கு ஓய்வூதியமாக ரூ.19,726 வழங்கப்படுகிறது.

ஆண்டு- 2016
பிரதமர் உரையின் நேரம் - 96 நிமிடங்கள்
முக்கிய அறிவிப்புகள் - பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா, பிரகதி திட்டம்.

பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா:
எப்போது தொடங்கப்பட்டது - 18 பிப்ரவரி 2016
இத்திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் - பிஎம் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 18 காப்பீட்டு நிறுவனங்கள், 1.7 லட்சம் வங்கிக் கிளைகள் மற்றும் 44000 பொது சேவை மையங்கள் என 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பயன்பெறும் வகையில் சேவைகளை வழங்குகின்றன. அக்டோபர் 31, 2022 வரை பயிர்க் காப்பீட்டுத் தொகையாக ரூ.25,186 கோடி செலுத்தப்பட்டுள்ளது.

பிரகதி திட்டம்:
எப்போது தொடங்கப்பட்டது - 2016
இத்திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் - பிரகதி திட்டத்தின் கீழ், நிலுவையில் உள்ள அரசு திட்டங்களை பிரதமர் மோடியே நேரடியாகவே கண்காணித்து வருகிறார். ஏழரை லட்சம் கோடி மதிப்பிலான 119 திட்டங்களை பிரதமர் மோடி ஆய்வு செய்து விரைவில் இந்த திட்டங்கள் செயல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

ஆண்டு- 2017
பிரதமர் உரையின் நேரம் - 56 நிமிடங்கள்
முக்கிய அறிவிப்புகள் - கேலண்ட்ரி விருது இணையதளம், GEM (ஜெம்) போர்டல்

கேலண்ட்ரி விருது இணையதளம்:
எப்போது தொடங்கப்பட்டது - 2017
இத்திட்டத்தின் விவரம் - 2017ல் செங்கோட்டையில் இருந்து பேசிய பிரதமர் மோடி, வீரர்களை கவுரவிக்கும் வகையில் கேலண்ட்ரி விருது இணையதளத்தை தொடங்குவதாக அறிவித்தார். கேலன்ட்ரி விருது வென்றவர்களின் முழு விவரங்கள் இணையதளத்தில் உள்ளன. இதுவரை இணையதளத்தை 1 கோடிக்கும் அதிகமானோர் பார்வையிட்டு உள்ளனர். 6 லட்சத்துக்கும் அதிகமானோர் பதிவு செய்து உள்ளனர்.

GEM (ஜெம்) போர்டல் திட்டம்:
எப்போது தொடங்கப்பட்டது - 17 மே 2017
இத்திட்டத்தின் விவரம் - இது இந்திய அரசின் இ-மார்க்கெட்ப்ளேஸ் இணையதளம். இதன் கீழ், 35 லட்சம் பொருட்கள் விற்பனையாகின்றன. அதே நேரத்தில், 67 லட்சம் விற்பனையாளர்கள் அதனுடன் இணைந்துள்ளனர். 2021-22 நிதியாண்டில், ஜெம் போர்ட்டலில் ரூ.1,06,760 கோடி வர்த்தகம் செய்யப்பட்டது. இது 2020-21 நிதியாண்டின் வணிகத்தை விட 178 சதவீதம் அதிகமாகும்.

மேலும் படிக்க - சுதந்திர தினம் 2023: தியாகம், வீரம், நாட்டுப்பற்றின் சாட்சியாய் சுதந்திர இந்தியா..வரலாற்றை சற்று திரும்பிப் பார்ப்போம்

ஆண்டு- 2018
பிரதமர் உரையின் நேரம் - 82 நிமிடங்கள்
முக்கிய அறிவிப்புகள் - ஆயுஷ்மான் பாரத், கிராம் ஸ்வராஜ் அபியான்.

ஆயுஷ்மான் பாரத்:
எப்போது தொடங்கப்பட்டது - 25 செப்டம்பர் 2018
இத்திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் - இது உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டம். இதுவரை 17.69 கோடி பேருக்கு இந்த திட்டத்தின் கீழ் அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இத்திட்டத்தின் பலனை 50 கோடி பேருக்கும் வழங்க வேண்டும் என்பதே மத்திய அரசின் இலக்கு. நாடு முழுவதும் உள்ள 13,000க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் இந்தத் திட்டத்துடன் இணைந்துள்ளன.

கிராம் ஸ்வராஜ் அபியான்:
எப்போது தொடங்கப்பட்டது - 14 ஏப்ரல் 2018
இத்திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் - கிராம ஸ்வராஜ் அபியான் திட்டத்தின் கீழ் நாட்டின் 21058 கிராமங்களுக்கு கிராம ஸ்வராஜ் அபியான் சிறப்பு முயற்சி தொடங்கப்பட்டது. இதன் மூலம் மத்திய அரசின் திட்டங்கள் கிராமம் தோறும் கொண்டு செல்லப்பட்டன.

ஆண்டு- 2019
பிரதமர் உரையின் நேரம் - 93 நிமிடங்கள்
முக்கிய அறிவிப்புகள் - ஜல் ஜீவன் மிஷன், 5 டிரில்லியன் பொருளாதாரம், 

ஜல் ஜீவன் மிஷன்:
எப்போது தொடங்கப்பட்டது - 15 ஆகஸ்ட் 2019
இத்திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் - 2024க்குள், நாட்டின் அனைத்து கிராமங்களிலும் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் மூலம் தண்ணீர் வழங்குவதை உறுதி செய்யப்படும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதன்மூலம் இதுவரை 12 கோடி வீடுகளுக்கு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மொத்தம் 19 கோடி குடும்பங்களுக்கு இந்த வசதி கிடைக்கும்.

5 டிரில்லியன் பொருளாதாரத்தை உருவாக்கும் இலக்கு:
எப்போது தொடங்கப்பட்டது - 2019
இத்திட்டத்தில் எவ்வளவு பணிகள் மேற்கொள்ளப்பட்டன- 15 ஆகஸ்ட் 2019 அன்று, பிரதமர் மோடி இந்தியாவை 5 டிரில்லியன் பொருளாதாரமாக மாற்ற இலக்கு நிர்ணயித்தார். இந்த இலக்கை 2030க்குள் முடிக்க கால இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தற்போது இந்தியாவின் பொருளாதாரம் 3 டிரில்லியனாக உள்ளது. உலக பொருளாதார தரவரிசையில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது.

மேலும் படிக்க - இந்தியாவின் தேசிய கீதமாக 'ஜன கண மன' எப்போது ஏற்றுக்கொள்ளப்பட்டது தெரியுமா?

ஆண்டு - 2020
பிரதமர் உரையின் நேரம் - 86 நிமிடங்கள்
முக்கிய அறிவிப்புகள் - புதிய கல்விக் கொள்கை, தேசிய டிஜிட்டல் ஹெல்த் மிஷன்.

புதிய கல்விக் கொள்கை:
இது எப்போது தொடங்கியது - 29 ஜூலை 2020
இத்திட்டத்தில் எவ்வளவு பணிகள் மேற்கொள்ளப்பட்டன - 1968 மற்றும் 1986க்கு பிறகு, இது சுதந்திர இந்தியாவின் மூன்றாவது கல்விக் கொள்கையாகும். நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படுகிறது. 

தேசிய டிஜிட்டல் ஹெல்த் மிஷன்:
எப்போது தொடங்கியது - ஆகஸ்ட் 15, 2020
இந்தத் திட்டத்தில் எவ்வளவு பணிகள் செய்யப்பட்டுள்ளன - நாட்டின் அனைத்து மக்களின் மருத்துவத் தரவுகளையும் ஆன்லைனில் கொண்டுவருவதே இதன் நோக்கம். நாட்டில் இதுவரை 44 கோடி சுகாதார அடையாள அட்டைகள் உருவாக்கப்பட்டு உள்ளன. இந்த திட்டத்தின் கீழ் 29 கோடி பேர் தங்கள் சுகாதார அட்டையை இணைத்துள்ளனர்.

ஆண்டு 2021
பிரதமர் உரையின் நேரம் - 88 நிமிடங்கள்
முக்கிய அறிவிப்புகள் - வந்தே பாரத் ரயில் திட்டம், சைனிக் பள்ளிகளில் பெண்கள்.

75 வந்தே பாரத் ரயில் அறிவிக்கப்பட்டது:
எப்போது தொடங்கியது - 15 பிப்ரவரி 2019
இத்திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் - இதுவரை 25 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன.

சைனிக் பள்ளிகளில் பெண்கள் சேர்க்கை:
எப்போது தொடங்கப்பட்டது - 2021
இத்திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் - நாட்டில் 33 சைனிக் பள்ளிகள் உள்ளன. 2021-22 முதல் இந்தப் பள்ளிகளில் பெண்களும் படிக்கலாம் என அறிவிக்கப்பட்டு, சேர்க்கை நடைபெறத் தொடங்கிகின.

ஆண்டு 2022
பிரதமர் உரையின் நேரம் - 83 நிமிடங்கள்
முக்கிய அறிவிப்பு - அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை, 

அடிமைத்தனத்திலிருந்து விடுதலை சபதம்:
புதிய பாராளுமன்றம் 2023 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இந்த ஆண்டு 163 ஆண்டுகள் பழமையான ஐபிசி, சிஆர்பிசி சட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன. இந்திய கடற்படையின் கொடி செப்டம்பர் 2022 அன்று மாற்றப்பட்டது. 2022 ஆம் ஆண்டிலேயே (கிங்ஸ் வே) ராஜ்பாத் துத்யபாத் என மறுபெயரிடப்பட்டது. ஐந்தாம் ஜார்ஜ் சிலையின் அடையாளத்தை அகற்றி நேதாஜி சிலை நிறுவப்பட்டது.

இந்த ஆண்டு சுதந்திர தினம்:
77வது சுதந்திர தினம் 2023: இந்தியாவின் 77-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலும் சுதந்திர தின கொண்டாட்டம் நேற்று முதலே களைகட்ட தொடங்கியுள்ளது. இன்று சுதந்திர தின விழா நடைபெறும் டெல்லி செங்கோட்டையில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இங்கு 10,000-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

சுதந்திர தினத்தில் முதல்வர் ஸ்டாலின் உரை:
தேசிய கொடியை ஏற்றி வைத்து முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். அவர் கூறியது..

- கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றினால்தான் நீட் போன்ற கொடூரமான தேர்வு முறையை அகற்ற முடியும்

- சுதந்திர போராட்ட வீரர்களின் குடும்பத்திற்கான ஓய்வூதியம் ரூ.11,000 ஆக அதிகரிப்பு.

- ஓலா, உபேர், ஸ்விகி பணியாளர்களுக்கு நல வாரியம் அமைக்கப்படும்.

- ஒரு கோடி மகளிர் மாதம்தோறும் பயனடையும் வகையில் "கலைஞர் மகளிர் உரிமைத்தொகை" திட்டம் அடுத்த மாதம் 15 ஆம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்தநாளன்று தொடங்கப்படும்.

- கடந்த 2 ஆண்டுகளில் தமிழ்நாடு அடைந்துள்ள வளர்ச்சி ஒரு துறையின் வளர்ச்சியாக இல்லாமல் பல்துறையின் வளர்ச்சியாக உள்ளது.

மேலும் படிக்க - Independence Day Big Sale: அமேசான், பிளிப்கார்ட்டில் அதிரடி தள்ளுபடி.... மிஸ் பண்ணிடாதீங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Read More