Home> India
Advertisement

உலகளாவிய மறுமலர்ச்சியில் இந்தியாவின் பங்கு மகத்தானதாக இருக்கும்: PM Modi

India Global Week 2020 இணைய மாநாட்டின் முதல் நாளில் பிரதமர் மோடி தொடக்க உரை ஆற்றினார்

உலகளாவிய மறுமலர்ச்சியில் இந்தியாவின் பங்கு மகத்தானதாக இருக்கும்: PM Modi

உலகளாவிய மறுமலர்ச்சியில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறுகிறார்.

அனைத்து உலக நிறுவனங்களும்  இந்தியாவில்  முதலீடு செய்ய அரசு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படும் என்று மோடி கூறினார்.

புதுடெல்லி (New Delhi): உலகளாவிய மறுமலர்ச்சியில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி (Prime Minister Narendra Modi) வியாழக்கிழமை தெரிவித்தார்.

ALSO READ | இந்தியாவில் கொரோனா பாதிப்பு சமூக பரவலாக மாறவில்லை - ஹர்ஷ்வர்தன்!

இந்தியா குளோபல் வீக் 2020 இணைய மாநாட்டின் முதல் நாளில் தொடக்க உரையை ஆற்றிய பிரதமர், “தற்போது உலகளவில் பொருளாதார மீட்பு நடவடிக்கை குறித்து பேசுப்படுவது இயற்கையான விஷயம் ஆகும். அதே போன்று உலகளாவிய மறுமலர்ச்சியையும் இந்தியாவையும் (India) இணைத்து பார்ப்பதும் இயற்கையானது ஆகும். உலகளாவிய மறுமலர்ச்சியில் இந்தியா ஒரு மகத்தான பங்கை வகிக்கும் என்று நம்பிக்கை உள்ளது" என்றார்.

உலகளாவிய மறுமலர்ச்சியில் இந்தியாவின்  மகத்தான பங்களிப்பிற்கு இரண்டு  மிக முக்கிய காரணங்கள் உள்ளதாக மோடி எடுத்துரைத்தார். முதலாவது இந்தியர்களுக்கு உள்ள திறமை. இரண்டாவது மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் இந்தியாவின் திறன் என மோடி குறிப்பிட்டார்.

ALSO READ | AIR INDIA நிறுவனம் TATA குழுமம் வசம் செல்லுமா... !!!

உலகம் முழுதும் தனது திறமையினால், உயர்ந்த நிலைக்கு வந்துள்ள இந்தியர்கள் உலகின் வளர்ச்சிக்கு அரும்பங்காற்றியுள்ளனர் என்றார் பிரதமர்.  ’’இந்திய தொழில்நுட்பத் துறையையும் தொழில்நுட்ப வல்லுநர்களையும் யார் மறக்க முடியும்! அவர்கள் பல தசாப்தங்களாக வழி காட்டியாக இருந்து வருகின்றனர். திறமைகள் கொட்டிக் கிடக்கும் நாடு இந்தியா. இந்தியர்கள் இயற்கையாகவே சீர்திருத்தவாதிகள்! சமூக அளவில், பொருளாதாரம் நிலையில் என ஒவ்வொரு சவாலையும் இந்தியா சமாளித்துள்ளது என்பதை வரலாறு காட்டுகிறது ”என்று பிரதமர் மேலும் கூறினார்.

பொருளாதார வளர்ச்சியின் மூலம் மீண்டும் இஅயல்பு நிலைக்கு கொண்டு வரும் தீர்மானத்தில் அரசு உறுதிபூண்டுள்ளது என்று மோடி கூறினார்.

"ஒருபுறம் இந்தியா உலகளாவிய தொற்றுநோய்க்கு எதிராக ஒரு வலுவான போரை நடத்துகிறது. மக்களின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தும் அதே நேரத்தில், பொருளாதார வளர்ச்சியின் மீதும் சமமாக கவனம் செலுத்துகிறோம், ” என்று பிரதமர் மோடி கூறினார்.

"இந்தியாவில் மறுமலர்ச்சியைப் பற்றி பேசும்போது மக்கள் நலனை பாதிக்காத மறுமலர்ச்சி, மக்கள் மீதான அக்கறையுடன் கூடிய மறுமலர்ச்சி, சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரம் ஆகிய இரண்டிற்குமான மறுமலர்ச்சி மேற்கொள்ளப்படும்" என்றும் பிரதமர் மோடி மேலும் கூறினார்.

சாத்தியமற்றது என்று கூறுவதை சாதித்து காட்டும் துடிப்பு  இந்தியர்களுக்கு இருக்கிறது என்றும் பிரதமர் கூறினார்.

கோவிட் -19 (COVID-19 ) தொற்றுநோய் பரவலின் இந்த நேரத்தில், இந்தியாவின் மருந்து துறை ஆற்றிய பங்கை மோடி பாராட்டினார்.

“இந்தியாவின் மருந்து துறை இந்தியாவுக்கு மட்டுமல்ல, முழு உலகிற்கும் ஒரு சொத்து என்பதை இந்த தொற்றுநோய் மீண்டும் உறுதி படுத்தியுள்ளது. மருந்துகளின் விலையை குறைப்பதில் இது ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது” என்று பிரதமர் மோடி கூறினார்.

Read More