Home> India
Advertisement

இந்திய-சீன போர்: இந்தியா தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ளும் - சுஷ்மா உறுதி

இந்திய-சீன போர்: இந்தியா தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ளும் - சுஷ்மா உறுதி

எல்லையில் சீன ராணுவத்தின் அத்துமீறலை எதிர்கொள்ள இந்தியா உஷார் நிலையில் என மத்திய அமைச்சர் தகவல் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.

எல்லையில் சீனாவின் நடவடிக்கைக் குறித்து மத்திய அரசின் நிலைப்பாடு என்ன? என மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதைக்குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியது, 

நாட்டின் பாதுகாப்பு விவகாரத்தில் இந்தியா மிகவும் எச்சரிக்கையாக உள்ளது. அதேசமயத்தில் சீனா தனது இராணுவத்தின் பழைய நிலைக்கு திரும்ப பெற்றால், இப்பிரச்சினையைப் பற்றி விவாதிக்கவும், பேச்சுவார்த்தை நடத்தவும் இந்தியா தயாராக உள்ளதாக கூறினார். 

சீனா, இந்தியா, பூட்டான் இடையிலான முச்சந்திப்பில் சீனா ஒருதலைப்பட்சமாக எல்லை நிலையை மாற்ற முயற்ச்சிக்கிறது. அது நமது பாதுகாப்பிற்கு ஒரு சவாலாக இருக்கும்.

இந்தியாவிற்கு சொந்தமான டோகாலா பகுதியை தங்கள் பகுதி என கூறிக்கொண்டு ஆக்கிரமிக்க முயற்சியில் சீனா இராணுவம் ஈடுபட்டுள்ளது. மேலும் இந்தியாவால் தன்னைத்தானே பாதுகாக்க முடியாது என்று சீனா சொல்வது தவறானது எனவும் அமைச்சர் கூறினார்.

மேலும் இந்தியாவால் தன்னை பாதுகாத்துக் கொள்ள முடியும். சீனாவின் எந்த ஒரு அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள இந்தியா உஷார் நிலையில் உள்ளது. எல்லையில் விவகாரத்தில் சர்வதேச நாடுகளின் ஆதரவு நமக்கு உள்ளது எனவும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறினார்.

Read More