Home> India
Advertisement

அலிகரில் இந்து மதத்திற்கு மாறியவருக்கு தொடரும் கொலை மிரட்டல்கள்..!!

அலிகரில்  இந்து மதத்திற்கு மாறியவருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வருவதை அடுத்து, அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

அலிகரில் இந்து மதத்திற்கு மாறியவருக்கு தொடரும் கொலை மிரட்டல்கள்..!!

லக்னோ: உ.பி. முழுவதும்  மத மாற்றத்திற்கு எதிரான சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள்  அதிகமாகி வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், அலிகார் காவல்துறை, இந்து மதத்திற்கு மாறிய பின்னர் கொலை மிரட்டல்கள் வருவதாக கூறப்படும் ஒருவருக்கு பாதுகாப்பு வழங்கியுள்ளது.

அலிகரில், காசிம் என்ற நபர் தனது குழந்தைகளுடன் டிசம்பர் 20 அன்று தனது தாய் மதமான இந்து மதத்திற்கு மாறினார். அவர் தனது பெயரை கரம்வீர் என மாற்றிக் கொண்டார். மதம் மாறியதிலிருந்து, கரம்வீர் தனக்கும் அவரது குடும்பத்திற்கும் கொலை மிரட்டல்கள் வருவதாக கூறினார்.

உத்திரபிரதேசத்தில் (Uttarpradesh), செய்தியாளர்களுடன் பேசிய, ​​கரம்வீர் டிசம்பர் 20 அன்று உள்ளூர் ஆர்யா சமாஜ் கோவிலில் வேத சடங்குகள் மூலம், சனாதன தர்மத்தை ஏற்றுக்கொண்டு, தாய் மதமான இந்து மதத்திற்கு திரும்பியதாக  கூறினார்.

"நான் மதம் மாறிய பிறகு, எனக்கும் எனது குடும்பமத்திற்கும் கொலை மிரட்டல் வருகிறது. எனக்கு போலீஸ் பாதுகாப்பு தேவை. இஸ்லாம் மதத்திலிருந்து மாறிய என்னை மீண்டும் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளுமாறு வற்புறுத்தி,  எனக்கு பணம் தர முன்வந்தார்கள். அதை நான் நிராகரித்த நிலையில், ​​அவர்கள் இப்போது என்னையும் எனது குடும்பத்தினரையும் அச்சுறுத்துகின்றனர், ”என்று கரம்வீர் கூறினார். தான் ஒரு வாரம் தலைமறைவாக இருந்ததாகவும் அவர் கூறினார்.

அவர் அளித்த புகாரின் பேரில், டெல்லி கேட் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்த பின்னர், கரம்வீர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது என காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

ALSO READ | திருநள்ளாறு சனிப் பெயர்ச்சி 2020 விழா: உயர் நீதிமன்றம் அனுமதி

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More