Home> India
Advertisement

பாகிஸ்தான் படகில் இருந்து 300 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல், 7 பேர் கைது

இந்திய - பாகிஸ்தான் கடல் எல்லையில் பாகிஸ்தான் படகு ஒன்றில் இருந்த 300 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. கப்பலில் இருந்த 8 பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

பாகிஸ்தான் படகில் இருந்து 300 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல், 7 பேர் கைது

இந்திய - பாகிஸ்தான் கடல் எல்லையில் பாகிஸ்தான் படகு ஒன்றில் இருந்த 300 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. கப்பலில் இருந்த 8 பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

குஜராத் பயங்கரவாத தடுப்புப் படையினருடன் இணைந்து இந்திய கடலோர காவல்படை மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையில் பாகிஸ்தான் படகில் (Pakistani boat) இருந்து 300 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டதாக இந்திய கடலோர காவல்படைதெரிவித்துள்ளது.

படகில் இருந்த எட்டு பாகிஸ்தானியர்களும் கைது செய்யப்பட்டனர். குஜராத்தின் ஜாகாவ் (Jakhau) நகரிலிருந்து புதன்கிழமை பின்னிரவில் இந்திய கடல் எல்லைக்குள் ‘NUH’ படகு பறிமுதல் செய்யப்பட்டது.

fallbacks

செவ்வாய்க் கிழமையன்று கிடைத்த உளவுத் தகவல்களின் அடிப்படையில் குஜராத் பயங்கரவாத தடுப்புப் படையினருடன் (Gujarat Anti-terrorism squad) இணைந்து இந்திய கடலோர காவல்படை (Indian Coast Guard) கூட்டு நடவடிக்கை மேற்கொண்டது. இந்திய-பாகிஸ்தான் சர்வதேச கடல் எல்லைக் கோட்டிலிருந்து பாகிஸ்தான் படகு ஒன்றில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக துப்பு கிடைத்தது. 

Also Read | அந்நியன் திரைப்பட இந்தி ரீமேக்கிற்கு தடா; இயக்குநர் ஷங்கருக்கு தயாரிப்பாளர் நோட்டீஸ்

அதன் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்ட கடலோர காவல்படை மற்றும் ஏடிஎஸ் அதிகாரிகள் பாகிஸ்தான் படகை தடுத்து நிறுத்தி, தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

படகில் இருந்து சுமார் 1 கிலோ எடையுள்ள சுமார் 30 பாக்கெட் ஹெராயின் மீட்கப்பட்டதாக கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் ரூ. 300 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட சரக்கு குஜராத் மாநிலத்திற்கு கொண்டு வரப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அடுத்தகட்ட விசாரணைக்காக படகிலிருந்த எட்டு பாகிஸ்தானியர்களும், குஜராத் மாநிலம் ஜாகாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  

Also Read | விதிகள் மாறாவிட்டால் 3 லட்சம் Remdesivir தடுப்பூசிகள் அழிக்கப்படும்

இதற்கு முன்னதாக சில வாரங்களுக்கு முன்னதாக லட்சதீவில் (Lakshadweep) இருந்து சுமார் 300 கிலோ ஹெராயின், 5 ஏகே 47 ரக துப்பாக்கிகள் மற்றும் 1000 சுற்று வெடிமருந்துகள் இலங்கை படகில் (Sri Lankan boat) இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. இலங்கை படகு ரவிஹான்சி (Ravihansi) பறிமுதல் செய்யப்பட்டது.  

இதற்கு முன்னர், மார்ச் 21இல் SLB Akarsha Duwaவை இந்திய கடற்படை பறிமுதல் செய்தது, அதில் இருந்த 200 கிலோ உயர் தர ஹெராயின் மற்றும் 60 கிலோ ஹஷிஷ் ஆகியவற்றை கொண்டு வந்தபோது, ரோந்துப் பணியில் இருந்த கடற்படை பறிமுதல் செய்தது.

நவம்பர் 2020இல் இதேபோன்ற நடவடிக்கையில், கன்னியாகுமாரியில் இருந்து இலங்கை படகு ஷெனயா துவாவை பறிமுதல் செய்தது, சுமார் 1000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கடந்த ஒரு வருடத்தில், சுமார் 1.6 டன் போதைப்பொருளை இந்திய கடற்படை கைப்பற்றியுள்ளது. 5200 கோடி ரூபாய் மதிப்புள்ளது.

ALSO READ | கொரோனா 2வது அலை: அச்சுறுத்தும் தொற்று, அலட்சியம் காட்டினால் அவதியே மிஞ்சும்

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More