Home> India
Advertisement

இந்திய ராணுவம் பதிலடி தாக்குதல் குறித்து விவரிக்க அனைத்துக் கட்சி கூட்டம் -சுஷ்மா சுவராஜ்

இந்திய ராணுவம் பதிலடி தாக்குதல் குறித்து ஆலோசனை செய்ய அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த வெளியுறவுத்துறை மந்திரி.

இந்திய ராணுவம் பதிலடி தாக்குதல் குறித்து விவரிக்க அனைத்துக் கட்சி கூட்டம் -சுஷ்மா சுவராஜ்

கடந்த வாரம் பிப்ரவரி 14 ஆம் தேதி ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநில புல்வாமா மாவட்டத்தின் அவந்திப்பூரா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு நிரம்பிய கார் CRPF வீரர்கள் சென்ற வாகனங்களில் மோதி தற்கொலை படை தாக்குதல் நடத்தியதில் மத்திய சேமக் காவல் படையை சேர்ந்த 44 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த துயர தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பையும், துயரத்தையும், வேதனையையும் ஏற்ப்படுத்தியது. புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என நாடு முழுவதும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து பதிலடி தாக்குதல் குறித்து முடிவெடுக்க ராணுவ வீரர்களுக்கு முழு அதிகாரத்தை பிரதமர் மோடி வழங்கினார். 

கடந்த 12 நாட்களாக பதிலடி குறித்து ஆலோசனை மற்றும் அதற்க்கான செயல்பாடுகளை குறித்து நடவடிக்கையில் இந்திய ராணுவம் ஈடுபட்டு வந்தது. 

இந்தநிலையில், இன்று அதிகாலை 3.30 மணியளவில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சர்வதே எல்லையை ஒட்டியுள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் பயங்கரவாத இயக்கங்கள் செயல்பட்ட வந்த முகாம்கள் மீது இந்திய ராணுவம் 1000 கிலோ அளவிலான குண்டுகளை வீசியது. அதில் குறிப்பாக ஜெய்ஷ் இ முகமது அமைப்பு முகாம்கள் அளிக்கப்பட்டதாகவும், அதில் செயல்பட்டு வந்த பயங்கரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டதாகவும் இந்திய வெளியுறவுத்துறை செயலர் விஜய் கோகலே தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இந்திய ராணுவம் பதிலடி தாக்குதல் குறித்து ஆலோசனை செய்ய இன்று மாலை 5 மணிக்கு அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ்.

Read More