Home> India
Advertisement

Viral Video: ‘நான்mask அணிவதில்லை… என்ன இப்ப?’ அமைச்சர் கேட்ட கேள்வியால் அனைவருக்கும் shock!!

கொரோனா காலத்தில் பல எச்சரிக்கை நடவடிக்கைகளையும், விதிமுறைகளையும் அரசாங்கம் மக்களுக்கு பரிந்துரைத்து வருகிறது.

Viral Video: ‘நான்mask அணிவதில்லை… என்ன இப்ப?’ அமைச்சர் கேட்ட கேள்வியால் அனைவருக்கும் shock!!

இந்தூர்: கொரோனா காலத்தில் தொற்று நம்மை எந்த வழியில் வந்து பற்றிக்கொள்ளக்கூடுமோ என்ற அச்சத்தில் அனைவரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பல எச்சரிக்கை நடவடிக்கைகளையும், விதிமுறைகளையும் அரசாங்கம் மக்களுக்கு பரிந்துரைத்து வருகிறது.

இந்நிலையில், அரசாங்கத்தில் உள்ளவர்களே அவற்றை பின்பற்றவில்லை என்றால், நிலைமை எப்படி இருக்கும்? இது குறித்து, சமீபத்தில், ஒரு பொறுப்பான பதவியில் இருக்கும் ஒரு அமைச்சரின் பொறுப்பற்ற பேச்சு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஷ்ரா (Narottam Mishra) வியாழக்கிழமை, 'நான் முகக்கவசம் அணிவதில்லை’ என கூறி அனைவரையும் ஆச்சரியத்திற்கு ஆளாக்கினார்.

இந்தூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவர் ஏன் முகக்கவசம் அணியவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த மிஷ்ரா, "நான் அதை அணிவதில்லை" என்றார். "எந்த நிகழ்விலும் நான் முகக்கவசம் அணிவதில்லை, அதனால் என்ன?“ என்று அவர் கூறினார். அவரது இந்த பேச்சின் வீடியோ சமூக ஊடகங்களில் (Social Media) வைரல் ஆனது.

பின்னர், இதனால் ஏற்படக்கூடும் பின் விளைவுகளுக்கு பயந்து, முகக்கவசம் (Face Mask) அணிவது குறித்த தனது அறிக்கை 'சட்டத்தை மீறுவதாகத் தோன்றியது' என்றும், இனி முகக்கவசம் அணிய வேண்டும் என தான் நினைப்பதாகவும் அவர் தெளிவுபடுத்தினார்.

"முகக்கவசம் அணிவது தொடர்பான எனது அறிக்கை சட்டத்தை மீறுவதாகத் தெரிகிறது. இது பிரதமரின் உணர்வுக்கு ஏற்ப இல்லை. நான் செய்த தவறை ஏற்றுக்கொண்டு வருத்தத்தை தெரிவிக்கிறேன். இனி நான் அனைத்து இடங்களிலும் முகக்கவசம் அணிவேன். அனைவரும் முகக்கவசம் அணிந்து தனி மனித இடைவெளியை கடைபிடிக்குமாறு நான் அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கின்றேன் "என்று மிஷ்ரா கூறினார்.

தன் கூற்றை மேலும் தெளிவாக்கும் முயற்சியில், மிஷ்ரா, தான் பொதுவாக முகக்கவசத்தை அணிந்துகொள்வதாகக் கூறினார். ஆனால் தான் பாலிபஸால் அவதிப்படுவதால் நீண்ட நேரம் அதை அணிந்து கொள்வது மூச்சுத் திணறலுக்கு வழிவகுக்கிறது என்றார்.

மிஷ்ராவின் அமைச்சரவை சகாக்கள் முகக்கவசம் அணிந்திருந்தனர்.

ALSO READ: Video: COVID Test UP Shocker-Target achieve செய்ய இப்படியெல்லாமா செய்வாங்க!!

ஏழைகளுக்கு சமூகப் பாதுகாப்பு வழங்கும் மாநில அரசின் சம்பல் யோஜனாவுக்கு உதவி வழங்கும் நிகழ்ச்சிக்காக மிஸ்ரா இந்தூரில் கலந்துகொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மிஷ்ராவின் அமைச்சரவை சகா துளசிராம் சிலாவத் மற்றும் பாரதிய ஜனதா கட்சித் (BJP) தலைவர்கள் முகக்கவசம் அணிந்திருந்தனர்.

மிஷ்ராவின் கருத்துக்கள் காங்கிரஸ் (Congress) கட்சியிடமிருந்து பல எதிர்வினைகளை உண்டுசெய்தன. COVID-19 விதிமுறைகள் பொது மக்களுக்கு மட்டும்தான் பொருந்துமா என்று அக்கட்சி கேள்வி எழுப்பியது.

"அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தைரியம் உள்ளவர்கள் யாராவது இருக்கிறார்களா? விதிகள் சாதாரண மக்களுக்கு மட்டும்தானா?" என்று மத்திய பிரதேச காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நரேந்திர சலுஜா ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேசத்தில் (Madhya Pradesh) மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்று இந்தூர். இங்கு முகக்கவசம் அணியாதவர்களுக்கு குடிமை அமைப்பு 200 ரூபாய் அபராதம் விதிக்கிறது.

ALSO READ: இனி கொரோனாவை மூலிகையால் விரட்டலாம்.. மூலிகை மருந்து பரிசோதனைக்கு WHO அனுமதி..!!! 

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More