Home> India
Advertisement

புதிய நாடாளுமன்றத்தில் அனைத்து எம்பிக்களும் நுழைந்த வரலாற்று சிறப்பு மிக்க தருணம்!

பழைய பாராளுமன்றத்திற்கு விடைபெற்று ஒரு நாள் கழித்து, சிறப்பு அமர்வின் மீதமுள்ள நாட்களில் எம்.பி.க்கள் செவ்வாய்க்கிழமை புதிய கட்டிடத்திற்கு சென்றனர்.  

புதிய நாடாளுமன்றத்தில் அனைத்து எம்பிக்களும் நுழைந்த வரலாற்று சிறப்பு மிக்க தருணம்!

நாடாளுமன்ற நடவடிக்கைகள் இன்று புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. பல வரலாற்று தருணங்களுக்கு சாட்சியாக இருந்த பழைய பாராளுமன்ற கட்டிடத்திற்கு இந்தியா விடைபெற்றது. நள்ளிரவில் இந்த நாடாளுமன்ற வளாகத்தினுள் நாட்டின் சுதந்திரம் அறிவிக்கப்பட்டது. இதை 'ஜனநாயக அருங்காட்சியகம்' ஆக்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. பழைய கட்டிடத்துக்கு ‘சம்விதன் சதன்’ என்று பெயரிட பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்துள்ளார். இப்போது புதிய இந்தியாவின் வருங்காலம் புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் உருவாக்கப்படும். 

இன்று காலை நாடாளுமன்றத்தின் பழைய கட்டிடத்தில் எம்.பி.க்களின் புகைப்பட அமர்வு நடந்தது. அதில் அனைத்து எம்பிக்களும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். புதிய நாடாளுமன்றத்துக்கான நுழைவு முறையான பூஜையுடன் தொடங்கியது, அதைத் தொடர்ந்து மத்திய மண்டபத்தில் பிரமாண்ட விழா நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், நிதின் கட்கரி மற்றும் இதர எம்.பி.க்கள் பழைய நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து வெளியேறி புதிய கட்டிடத்தை நோக்கி சென்றனர்.

 

 

நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடத்தில் மதியம் 1:15 மணிக்கு மக்களவை நடவடிக்கைகள் தொடங்கின. மாநிலங்கள் அவை நடவடிக்கைகள் செவ்வாய்கிழமை மதியம் 2:15 மணிக்கு புதிய பார்லிமென்டில் துவங்குகிறது.

தற்போது பிரதமர் உரையாற்றி வருகிறார் அதில் அவர் கூறியதாவது:

புதிய நாடாளுமன்றத்திற்கு உங்கள் அனைவரையும் இதயப்பூர்வமாக வரவேற்கிறேன்.

விநாயகர் சதுர்த்தியில் புதிய மசோதாக்களை கொண்டு வருவது சிறப்பு வாய்ந்தது

நேருவிடம் கொடுக்கப்பட்ட செங்கோல் புதிய நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டிருப்பது பெருமையளிக்கிறது

மேலும் படிக்க | பழைய நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியின் கடைசி உரை... சில முக்கிய அம்சங்கள்!

இன்று மதியம் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் சிறப்புக் கூட்டத் தொடர் தொடங்கும் நிலையில் இன்றைய தினமே மகளிருக்கான 33% இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வேல் தெரிவித்து உள்ளார். பழைய நாடாளுமன்றத்தில் நடந்த நேற்றைய அமர்வில் பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுகால சிறப்புகள், முக்கிய முடிவுகளை, நிகழ்வுகளை குறிப்பிட்டு வரலாறு குறித்து பேசினார். அவரை தொடர்ந்து ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுகால வரலாற்றை நினைவுகூர்ந்தார். நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில், “இந்த  நாடாளுமன்ற கட்டிடத்தில் இருந்து விடைபெறுவது ஒரு உணர்ச்சிகரமான தருணம்... பல கசப்பான-இனிப்பான நினைவுகள் அதனுடன் இணைந்துள்ளன. நாங்கள் அனைவரும் பாராளுமன்றத்தில் கருத்து வேறுபாடுகள் மற்றும் விவாதங்களையும் கண்டிருக்கிறோம், ஆனால் அதே நேரத்தில், 'நாம் அனைவரும் ஒரே குடும்பம் என்ற எண்ணத்தையும் ' நாம் கண்டிருக்கிறோம் என பிரதமர் கூறினார்.

முன்னதாக, நாடாளுமன்ற கூட்டத்துக்கு பின் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் இருந்த முக்கிய கோரிக்கையான பெண்களுக்கு நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் 33% இடஒதுக்கீடு வழங்குவது பற்றி முடிவு செய்யப்பட்டது. இந்த சிறப்புக் கூட்டத்தொடரிலேயே அந்த மசோதா தாக்கல் செய்யப்படலாம் என்றும் தகவல் வெளியானது. இந்த நிலையில் நேற்று பழைய நாடாளுமன்றக் கட்டிடத்துக்கு பிரதமர், மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள் பிரியா விடை கொடுத்தனர்.  

மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு செம என்ஜாய்மெண்ட்.. ஜாக்பாட் அறிவிப்பு வெளியிட்ட ரயில்வே

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More