Home> India
Advertisement

தில்லியில் high alert: டிரோன் தாக்குதல் நடக்கக்கூடும் என எச்சரித்த உளவுத்துறை

ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நாட்டின் 75 வது சுதந்திர தினத்திற்கு முன்னதாக டெல்லியில் பயங்கரவாத தாக்குதல் ஏற்படக்கூடும் என்று உளவுத்துறை அளித்த தகவலை அடுத்து பாதுகாப்பு அமைப்புகள் தேசிய தலைநகரை மிகுந்த எச்சரிக்யுடன் கவனித்து வருகின்றன. 

தில்லியில் high alert: டிரோன் தாக்குதல் நடக்கக்கூடும் என எச்சரித்த உளவுத்துறை

புதுடில்லி: ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நாட்டின் 75 வது சுதந்திர தினத்திற்கு முன்னதாக டெல்லியில் பயங்கரவாத தாக்குதல் ஏற்படக்கூடும் என்று உளவுத்துறை அளித்த தகவலை அடுத்து பாதுகாப்பு அமைப்புகள் தேசிய தலைநகரை மிகுந்த எச்சரிக்யுடன் கவனித்து வருகின்றன. 

தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற மழைக்கால அமர்வுக்கும் (Monsoon Session) ஆகஸ்ட் 15 க்கும் இடைப்பட்ட காலத்தில் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு டெல்லி காவல்துறைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உளவுத்துறை தகவல்களின் படி, ஆகஸ்ட் 5 ஆம் தேதி டெல்லியில் தாக்குதல் நடத்த ஒரு பெரிய பயங்கரவாத சதி நடந்து வருகிறது.  பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதிகள் தேசிய தலைநகரில் தாக்குதலை நடத்தக்கூடும்.

ஆகஸ்ட் 5, 2019 அன்று ஜம்மு-காஷ்மீரில் இருந்து 370 வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டது. இதனால் பயங்கரவாதிகள் மிகுந்த பின்னடவை எதிர்கொண்டுள்ளனர். இதன் விளைவாக பயங்கரவாதிகள் தேசிய தலைநகரில் இந்த நாளிலேயே ஒரு பெரிய தாக்குதலை நடத்த முயற்சிப்பதாகவும் பாதுகாப்பு அமைப்புகள் தில்லி காவல்துறைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.

ALSO READ: பெட்ரோல்-டீசல் விலை உயர்வால் சாதனை! ஒரே ஆண்டில் கலால் வரி வசூல் ரூ.3.35 லட்சம் கோடி

'ட்ரோன் ஜிஹாத்' (Drone Attack) அச்சுறுத்தலை சமாளிக்க டெல்லி காவல்துறை மற்றும் பிற பாதுகாப்பு படையினருக்கும் சிறப்பு பயிற்சிகளும் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது வந்துள்ள எச்சரிக்கையைத் தொடர்ந்து 'சாஃப்ட் ஸ்கில்’ மற்றும் 'ஹார்ட் கில்’ ஆகிய பயிற்சிகள் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டு வருகின்றன.

கோவிட் -19 தொற்றுநோயை ஒரு சாக்காக பயன்படுத்தி, சமூக விரோத சக்திகளும் பயங்கரவாத ஸ்லீப்பர் செல்களும் நாட்டின் அமைதியை சீர்குலைக்க முயற்சிக்கின்றன என்றும் எச்சரிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புதிதாக நியமிக்கப்பட்ட தில்லி போலீஸ் கமிஷனர் பாலாஜி ஸ்ரீவஸ்தவா இந்த மாத தொடக்கத்தில், சுதந்திர தினத்திற்கு முன்னதாக மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு காவல்துறை படைகளுக்கு அறிவுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தில்லி (Delhi) போலீஸ் கமிஷனர் ஞாயிற்றுக்கிழமை இரவு 30,000 காவல்துறையினருடன் நகரமெங்கும் ரோந்துப் பணியை மேற்கொண்டார்.

தேசிய தலைநகரில், குறிப்பாக சிங்கு, திக்ரி மற்றும் காசிப்பூர் ஆகிய மூன்று எல்லைகளுக்கு அருகே பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு கடந்த ஆண்டு பிற்பகுதியிலிருந்து விவசாயிகள் போராட்டம் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: Pegasus Spyware-ன் இலக்கில் பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள்: பகீர் தகவல்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Read More