Home> India
Advertisement

டெல்லியில் பலத்த காற்றுடன் கொட்டிய மழை

டெல்லியில் பலத்த காற்றுடன் கொட்டிய மழை

தலைநகர் டெல்லி மற்றும் புறநகரில் இன்று பலத்த காற்றுடன் மழை பெய்தது. டெல்லி, நோய்டா உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது.

நாடு முழுவதும் வெயில் வறுத்தெடுத்து வருகிறது. வெயில் கொடுமை தாளாமல் பகல் நேரங்களில் மக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெயிலால் மக்கள் அவதியடைந்தும் வருகின்றனர். கடுமையாக வீசும் அனல் காற்றால் வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர்.

கனமழையின் காரணத்தால் சாலையில் வெள்ளம் பாய்ந்தோடியது. இருச்சக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் வெள்ள நீரில் சிக்கி ஊர்ந்து சென்றது. இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

இந்நிலையில் தலைநகர் டெல்லி மற்றும் என்சிஆர் பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. டெல்லியில் பெய்து வரும் மழையால் டெல்லி வாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Read More