Home> India
Advertisement

தெலுங்கானாவின் பல்வேறு இடங்களில் பலத்த மழை!

தென்மேற்கு பருவமழை காரணமாக தெலுங்கானாவின் பல்வேறு இடங்களில் பலத்த மழை பொழிந்து வருகின்றது!

தெலுங்கானாவின் பல்வேறு இடங்களில் பலத்த மழை!

ஐதராபாத்: தென்மேற்கு பருவமழை காரணமாக தெலுங்கானாவின் பல்வேறு இடங்களில் பலத்த மழை பொழிந்து வருகின்றது!

தெலுங்கானாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பொழிந்து வருகின்றது. இந்த மழை விவசாயிகளின் தேவையினை பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாநிலத்தில் அதிகப்படியான மழையாக அஸிபாபாத் மாவட்டத்தின் கும்ரம் பீம் பகுதியில் பொழிந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சிர்பூர் மாவட்டம் 11செமி மழையும், மஞ்சேரியின் சென்னூர் பகுதியில் 6 செமி மழையும் பதிவாகியுள்ளது. 

பொழிந்துவரும் மழை மஞ்சேரி மாவட்ட விவசாயிகளின் தண்ணீர் தேவையினை பூர்த்தி செய்யும் என நம்பப்படுகிறது. 

பருவமழையானது சில வாரங்களுக்கு முன்னதாக தெலுங்கானாவில் துவங்கியது. எனினும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையினை பாதிக்காத வகையிலேயே இந்த மழை பொழிந்து வந்தது. இந்நிலையில் தற்போது வட மாநிலங்களைப் போல் பொழிந்து வரும் பருவமழை கனிசாமான நீர் தேவையினை பூர்த்தி செய்யும் என்பதில் ஐயம் இல்லை.

Read More