Home> India
Advertisement

ஹரியானா சட்டசபை தேர்தல்: 78 வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்ட பாஜக

வரும் அக்டோபர் 21 அன்று நடைபெற உள்ள ஹரியானா சட்டசபை தேர்தலுக்கான 78 பேர் கொண்ட முதல் பட்டியலை பாஜக வெளியிட்டது.

ஹரியானா சட்டசபை தேர்தல்: 78 வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்ட பாஜக

சண்டிகர்: ஹரியானா (Haryana) மாநிலத்தில் வரும் அக்டோபர் 21 அன்று சட்டப்பேரவைத் தேர்தல் (Haryana Assembly Elections 2019) நடைபெற உள்ளதால், பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் 78 வேட்பாளர்களை பட்டியலை அறிவித்துள்ளது. கர்னல் தொகுதியில் முதல்வர் மனோகர் லால் கட்டர் (Manohar Lal Khattar) போட்டியிடுவார். அரியான மாநில பாஜக தலைவர் சுபாஷ் பராலா (Subhash Baral) கோஹானாவிலிருந்து போட்டியிடுவார். மல்யுத்த வீரர் யோகேஸ்வர் தத் (Yogeshwar Dutt) சோனிபட் தொகுதியிலும், முன்னாள் ஹாக்கி அணியின் கேப்டன் சந்தீப் சிங் பெஹோவா குருக்ஷேத்ரா தொகுதியிலும், தாத்ரி தொகுதியில் இருந்து மல்யுத்த வீராங்கனை பபிதா போகாட் (Babita Phoga) போட்டியிடப்போவதாக பாஜக பொதுச்செயலாளர் அருண் சிங் (Arun Singh) தெரிவித்துள்ளார். 

ஹரியானா மாநிலத்தின் 90 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளது. அனைத்து தொகுதிக்கும் அக்டோபர் 21 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24 ஆம் தேதி நடைபெறும். அன்றே முடிவுகள் அறிவிக்ப்படும். சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் அக்டோபர் 4 ஆகும். வேட்புமனுக்களை மறுஆய்வு நாள் அக்டோபர் 5 ஆகும். வேட்புமனு வாபஸ் பெறுவதற்கான கடைசி தேதி அக்டோபர் 7 ஆகும். இந்தமுறை 2014 ஆம் ஆண்டை விட 19.58 சதவீதம் அதிக வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. 

மனோகர் லால் கட்டர் தலைமையிலான பாஜக அரசு 2014 சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் 90 இடங்களில் 47 இடங்களை கைப்பற்றி ஹரியானாவில் ஆட்சியை பிடித்தது. அதே நேரத்தில் காங்கிரஸ் வெறும் 15 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Read More