Home> India
Advertisement

குல்பர்க் சொசைட்டி வழக்கில் குற்றவாளிகளின் தண்டனை விபரம் இன்று அறிவிக்கப்படும்

குல்பர்க் சொசைட்டி வழக்கில் குற்றவாளிகளின் தண்டனை விபரம் இன்று அறிவிக்கப்படும்

கடந்த 2002-ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத்தில் வன்முறை வெடித்தது. அப்போது வன்முறைக் கும்பல் ''குல்பர்க் சொசைட்டி'' இருந்த முஸ்லிம் 69 பேரை படுகொலை செய்தது. இந்த கொலையில் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ஈசன் ஜாப்ரியும் கொல்லப்பட்டார்.

இதுதொடர்பான வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் உச்ச நீதிமன்றம் கண்காணிப்பில் நடந்து வந்தது. சிறப்பு நீதிமன்ற நீதிபதி பி.பி தேசாய் தீர்ப்பு வழங்கினார். அதில் அகமதாபாத் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 36 பேரை விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது. மேலும் 24 பேர் குற்றவாளிகள் என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்கள் 6-ம் தேதி அறிவிக்கப்படும் என்று கூறியிருந்தது. ஆனால் நீதிமன்றம் இந்த வழக்கின் தண்டனை அறிவிப்பை ஒத்திவைத்தது. தண்டனை விபரம் வரும் 9-ம் தேதி அறிவிக்கப்படும் என்று சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நேற்று  தண்டனை விபரம் அறிவிக்கப்படவில்லை. எனவே இன்று தண்டனை விபரம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Read More