Home> India
Advertisement

குஜராத் முதல்வர் அனந்தீபென் பதவி விலக விருப்பம்

குஜராத் முதல்வர் அனந்தீபென் பதவி விலக விருப்பம்

குஜராத் முதல்வர் பதவி விலக விருப்பம் தெரிவித்துள்ளதாக குஜராத்தில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குஜராத்தில் முதல்வராக இருந்த நரேந்திரமோடி பிரதமர் பதவியில் அமர வேண்டிய வாய்ப்பு வந்ததையடுத்து மோடியின் நம்பிக்கையான அனந்தீபென் பட்டேலை முதல்வராக நியமித்தார். கடந்த 2 ஆண்டுகளாக ஒரளவுக்கு பிரச்சனை இல்லாமல் மாநிலத்தை கொண்டுச்சென்றார். 

கடந்த ஒரு சில மாதங்களாக குஜராத்தில் தலித் மக்கள் தாக்கப்படுவதாக ஒரு புகார் எழுந்தது. சமீபத்தில் மாட்டுத்தோல் வைத்திருந்ததாக சிலர் தாக்கப்பட்டனர். இது முதல்வர் மீது அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் இது தொடர்பாக கண்டன போராட்டங்கள் வலுத்தன. இந்நிலையில் முதல்வர் அனந்தீபென் பட்டேல், தமக்கு வரும் நவம்பர் மாதம் 75 வயது பிறந்த கொண்டாடவுள்ளேன். அதனையொட்டி முதல்வர் பொறுப்பில் இருந்து விடுவித்து கொள்ள விரும்புகிறேன் என்ற அவரது பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார். மேலும் பா.ஜ., மூத்த தலைவர்களிடமும் அவர் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். பா.ஜ.,மேலிடமும் ஏற்று கொண்டதாக தெரிகிறது. 

அடுத்த வருடம் 2017-ல் குஜராத் சட்டசபை தேர்தல் வரவிருப்பதால் அடுத்து வரும் முதல்வரை தேர்வு செய்வதில் பா.ஜ.க இருப்பதாக தெரிகிறது. 

Read More