Home> India
Advertisement

"ஜிஎஸ்டி" அமல் மிகப் பெரிய சாதனை: அரவிந்த் சுப்ரமணியன்!!

ஜிஎஸ்டி மீதான பொருளாதார ஆய்வறிக்கை, இந்திய பொருளாதாரத்தை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும் என பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் கூறியுள்ளார்.

பொருளாதார ஆலோசகரான அரவிந்த் சுப்ரமணியன் ஜிஎஸ்டி மீதான பொருளாதார ஆய்வறிக்கை, இந்திய பொருளாதாரத்தை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும் என்றார்.  

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்தினார். 

அதின் பின்னர், நிதியமைச்சர் அருண் ஜெட்லி இன்று தாக்கல் செய்த நடப்பாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையின் சில முக்கிய அம்சங்கள் தாக்கல் செய்தார்.

அதில்,2018-19ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 முதல் 7.5 சதவீதமாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.

இந்த பொருளாதார ஆய்வறிக்கையில் இடம்பெற்ற அம்சங்கள் குறித்து தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் கூறியதாவது:-  ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டது இந்த ஆண்டின் மிகப் பெரிய சாதனை. இந்த ஆண்டு எண்ணெய் விலை நுகர்வோரை கடுமையாக பாதித்துள்ளது. இதற்கு அரசு நிதி அளித்து, உண்மையான பொருளாதார நடவடிக்கையை திரும்ப செய்துள்ளது. 

இந்த ஆண்டு பொருளாதாரத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டு வளர்ச்சி மற்றும் முதலீடுகள் நிறைந்ததாக இருக்கும். இரட்டை பேலன்ஸ் சீட் சவால்களாக நாங்கள் நினைப்பது அங்கீகாரம், தீர்மானம், மறுசீரமைப்பு மற்றும் சீர்திருத்தங்கள். இந்த 4 'ஆர்' களை நாங்கள் சரியாக கையாண்டுள்ளோம் என நினைக்கிறேன்.

விவசாயித்திற்கு உதவுவது, ஜிஎஸ்டியை நிலைப்படுத்துவது, இரட்டை பேலன்ஸ் சீட் சவால்களில் சீர்திருத்தம் கொண்டு வருவது, ஏர்இந்தியாவை தனியார்மயமாக்குவது, பொருளாதார நெருக்கடிகளை குறைப்பது, எண்ணெய் விலைகள் அதிரடியாக உயர்வது குறைப்பது, பங்குகளின் விலையை சீராக்குவது இது தான் இந்த ஆண்டின் கொள்கை. 

ஜிஎஸ்டி இந்திய பொருளாதாரத்தை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும். உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறும். ஜிஎஸ்டி கவுன்சிலின் செயல்பாடு இதற்கு உறுதுணையாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

Read More