Home> India
Advertisement

காஷ்மீரில் பணிபுரியும் துணை ராணுவ வீரர்களுக்கு சிறப்பான வசதி!

காஷ்மீரில் பணிபுரியும் துணை ராணுவ வீரர்கள் வர்த்தக விமானங்களில் இலவசமாக சென்று வர மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது. 

காஷ்மீரில் பணிபுரியும் துணை ராணுவ வீரர்களுக்கு சிறப்பான வசதி!

காஷ்மீரில் பணிபுரியும் துணை ராணுவ வீரர்கள் வர்த்தக விமானங்களில் இலவசமாக சென்று வர மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது. 

கடந்த 14ம் தேதி ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநில புல்வாமா மாவட்டத்தின் அவந்திப்பூரா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு நிரம்பிய காரினை கொண்டு வந்து CRPF வீரர்கள் சென்ற வாகனங்களில் மோதி தற்கொலை படை தாக்குதல் நடத்தியதில் மத்திய சேமக் காவல் படையை சேர்ந்த 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பையும், துயரத்தையும், வேதனையையும் ஏற்ப்படுத்தி உள்ளது. 

இந்த சம்பவத்தை தொடர்ந்து வீரர்களின் பாதுகாப்புக்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் பணிபுரியும் துணை ராணுவ வீரர்கள் வர்த்தக விமானங்களில் இலவசமாக சென்று வர மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வரும் எனவும் இதன் மூலம் சுமார் 7,80,000 பாதுகாப்பு வீரர்கள் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது. இதற்கான உரிமத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.

fallbacks

இதன் மூலம் துணை ராணுவ வீரர்கள் வர்த்தக விமானங்களில் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ளலாம். பின்னர் அந்த கட்டணத்தை தங்கள் நிர்வாகத்திடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.

Read More