Home> India
Advertisement

இந்தியா தற்போது COVID-19-ன் சமூக பரவல் நிலையில் உள்ளது: சுகாதார அமைச்சர் Harsh Vardhan

வைரஸின் பிறழ்வு எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை என்று சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் உறுதியளித்தார்.

இந்தியா தற்போது COVID-19-ன் சமூக பரவல் நிலையில் உள்ளது: சுகாதார அமைச்சர் Harsh Vardhan

புதுடெல்லி: கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் சமூக பரவல் கட்டத்தை இந்தியா தற்போது கண்டுகொண்டிருப்பதாக அரசாங்கம் முதல் முறையாக ஒப்புக் கொண்டது. மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் (Harsh Vardhan) தனது வாராந்திர ஞாயிற்றுக்கிழமை உரையாடலின் போது இதை ஒப்புக்கொண்டார். எனினும், சமூகப் பரவல் சில மாவட்டங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டதாகவும், நாடு முழுவதும் இல்லை என்றும் சுகாதார அமைச்சர் கூறினார்.

"மேற்கு வங்கம் உட்பட பல்வேறு மாநிலங்களில் வெவ்வேறு பகுதிகளில், குறிப்பாக மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதிகளில் சமூக பரவல் (Community Transmission) ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இது நாடு முழுவதும் ஏற்படவில்லை. சமூக பரவல் சில மாவட்டங்களுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது” என்று ஹர்ஷ் வர்தன் கூறினார்.

வைரஸின் பிறழ்வு (Virus Mutation) எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் அமைச்சர் உறுதியளித்தார். குறிப்பாக, வைரஸில் உள்ள எந்தவொரு பெரிய பிறழ்வும் தடுப்பு மருந்து தயாரிப்பின் தொடர்ச்சியான செயல்முறையைத் தடுக்கக்கூடும். இந்தியாவில் COVID-19 வைரஸின் மரபணு குறித்த இரண்டு ஆய்வுகள், இது மரபணு ரீதியாக நிலையாக உள்ளது என்றும் இங்கு பெரிய பிறழ்வு எதுவும் காணப்படவில்லை என்றும் கூறியுள்ளதாக மத்திய அரசு கூறிய ஒரு நாள் கழித்து சுகாதார அமைச்சரின் இந்த உத்தரவாதம் வந்துள்ளது.

வுஹானில் (Wuhan) மட்டுமல்லாமல் வேறு இடங்களிலிருந்தும் இந்த வைரஸ் பரவி இருக்கலாம் என்ற சீனாவின் கூற்றுகளையும் ஹர்ஷ் வர்தன் நிராகரித்தார். "உலகளவில் பல இடங்களிலிருந்து இந்த வைரஸ் பரவியது என்பதை உறுதிபடுத்தும் எந்த ஆதாரமும் இல்லை" என்று அவர் கூறியதாக நியூஸ் 18 இன் அறிக்கை ஒன்று தெரிவித்தது.

ALSO READ: இந்தியாவில் டிசம்பர் மாதத்திற்குள் COVID-19 தடுப்பூசி தயாராக இருக்கலாம்: SII

முன்னதாக, அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்களின் குழு, இந்தியாவின் COVID-19 உச்சம் முடிந்துவிட்டதாகவும், பிப்ரவரி 2021 இறுதிக்குள் வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன என்றும் கூறியது. இருப்பினும், COVID -19 நெறிமுறைகளைப் பின்பற்றுவதில் தளர்வு ஏற்பட்டால், அது நோய்த்தொற்றுகள் அதிகரிக்க வழிவகுக்கும் என்றும் இந்த குழு எச்சரித்துள்ளது.

இந்தியாவில் 30 சதவீத மக்கள் இந்த கொடிய நோய்த்தொற்றுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றுள்ளனர் என்றும் குழு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இதற்கிடையில், கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை 1,14,031 ஆக உயர்ந்ததாக சுகாதார அமைச்சகத்தின் தரவு காட்டுகிறது. இன்று கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக எட்டு லட்சத்திற்கும் குறைவாகவே இருந்தது.

ALSO READ: மனிதர்களின் தோலில் கொரோனா வைரஸ் எவ்வளவு காலம் உயிர்வாழும் தெரியுமா?

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More