Home> India
Advertisement

LPG Gas Price: மகிழ்ச்சி! சமையல் கேஸ் சிலிண்டரின் விலை 200 ரூபாய் வரை குறையலாம்

Gas Cylinder Price: சமையல் கேஸ் சிலிண்டர் விலை குறையும் என்ற எதிர்பார்ப்புகளும், அது சாத்தியம் தான் என்ற செய்தியும் சாமானிய மக்களுக்கு வயிற்றில் பால் வார்க்கும் விஷயமாக இருக்கிறது

LPG Gas Price: மகிழ்ச்சி! சமையல் கேஸ் சிலிண்டரின் விலை 200 ரூபாய் வரை குறையலாம்

புதுடெல்லி: எல்பிஜி கேஸ் சிலிண்டரின் விலையில் ஏற்ற இறக்கம் ஏற்படும் போதெல்லாம், சாமானி மக்களிடையே அதன் தாக்கம் உடனடியாக எதிரொலிக்கிறது. விலை உயரும்போது பிரச்சனைகளை சந்திக்க நேரிட்டால், எல்பிஜி கேஸ் சிலிண்டர்களின் விலை குறைந்தால் மக்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. தற்போது சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. 

விரைவில் எல்பிஜி கேஸ் சிலிண்டர்களின் விலையில் பெரும் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. ஏனெனில், மத்திய அரசு காஸ் சிலிண்டர் விலையை 200 ரூபாய் வரை குறைக்க வாய்ப்புள்ளதாகவும், காஸ் சிலிண்டர் விலையை ஆகஸ்ட் 30ம் தேதி முதல் குறைக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது என்ற செய்தியும் வெளியாகியுள்ளது. 

காஸ் சிலிண்டர் விலை ஆகஸ்ட் 30 முதல் 200 ரூபாய் வரை குறாஇயலாம் என்பது, நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்கும். இந்த மாத தொடக்கத்தில், எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் (OMCs) உள்நாட்டு சமையல் எரிவாயு விலையை மாற்றவில்லை. அதே வேளையில் வணிக ரீதியான LPG (திரவ பெட்ரோலியம் எரிவாயு) க்கான விலைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டன.

மேலும் படிக்க | ரயில் பயணிகள் கவனத்திற்கு! மேலும் 5 புதிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்..!

ஆகஸ்ட் 1 முதல் 19 கிலோ வணிக எல்பிஜி எரிவாயு சிலிண்டர்களின் விலையில் குறிப்பிடத்தக்க வகையில் ரூ.99.75 குறைப்பு காணப்பட்டது. இதன் விளைவாக, டெல்லியில் 19 கிலோ வணிக எல்பிஜி சிலிண்டரின் சில்லறை விற்பனை விலை தற்போது ரூ.1,680 ஆக உள்ளது.

நீண்ட காலமாக எல்பிஜி எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இல்லை. மேலும் எண்ணெய் நிறுவனங்களும் விலை மாற்றம் தொடர்பான பெரிய முடிவை எடுக்கலாம். மத்திய அரசும் தன் பக்கம் இருந்து சமையல் எரிவாயு விலையைக் குறைக்கும். ஏனென்றால் அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலும் நடக்க உள்ளது. தேர்தலுக்கு முன், அனைத்து தரப்பு குடிமக்களையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க அரசு விரும்புகிறது. மேலும் பணவீக்கம் கட்டுப்படுத்துவதற்கும் இது ஒரு வழி என்று கூறப்படுகிறது. ஏனெனில் சமையல் எரிவாயு விலை குறையும் போது தான் பணவீக்கம் பெரிய அளவில் குறையும். 

எல்பிஜி கேஸ் சிலிண்டர் பயன்பாடு

இன்று, 99% மக்கள் வீட்டு எரிவாயுவைப் பயன்படுத்துகின்றனர். அதனால் மத்திய அரசு மானியம் வழங்குவதை நிறுத்தியது. ஏனென்றால் அனைவருக்கும் கொடுக்கப்பட்டால் அதன் பயன் சாமானியர்களுக்கும், வறியவர்களுக்கும் பெரிய அளவில் இருக்காது. அதோடு, அரசுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும். அதனால்தான் சில ஆண்டுகளுக்கு முன்னரே, எரிவாயு சிலிண்டருக்கு மானியம் வழங்குவதை அரசு நிறுத்திவிட்டது.  

மேலும் படிக்க: WhatsApp! ரீசார்ஜ் செய்யாமல் அன்லிமிடெட் காலிங் செய்ய முடியும்.. வருகிறது புதிய வசதி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More