Home> India
Advertisement

தங்கம் விலையில் கடும் வீழ்ச்சி; தங்கம் வாங்க ஏற்ற நேரம்..!!

கொரோனா பெருந்தொற்று உச்சம் அடைந்த காலத்தில் தொழில்துறையில் பெரும் தேக்க நிலை காணப்பட்டதால், முதலீட்டாளர்கள்  தங்கத்தின் மீதான முதலீட்டை மிகவும் பாதுகாப்பான முதலீடாக கருதியதால், அதில் அதிக அளவில் முதலீடு செய்தனர்.

தங்கம் விலையில் கடும் வீழ்ச்சி; தங்கம் வாங்க ஏற்ற நேரம்..!!

கொரோனா பெருந்தொற்று உச்சம் அடைந்த காலத்தில் தொழில்துறையில் பெரும் தேக்க நிலை காணப்பட்டதால், முதலீட்டாளர்கள்  தங்கத்தின் மீதான முதலீட்டை மிகவும் பாதுகாப்பான முதலீடாக கருதியதால், அதில் அதிக அளவில் முதலீடு செய்தனர். இதனை அடுத்து தங்கத்தின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வந்தது.  மேலும் பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட் மீதான முதலீடுகள் மிகவும் குறைந்து தங்கத்தில் மீதான முதலீடு தொடர்ந்து அதிகரித்து வந்தது. பின்னர், பொருளாதார நிலைமையில் முன்னேற்றம் காணப்பட்டதால், தங்கத்தின் விலைகள் சிறிது குறைந்தன. பின்னர் மீண்டும் பண்டிகை காலத்தை ஒட்டி அதிகரித்து ஏற்றம் இறக்கங்கள் காணப்பட்டது. 

இந்நிலையில், பெண்களுக்கு மிகவும் பிடித்தமான, அதிலும் தென்னிந்திய பெண்கள் அதிகம் விரும்பும் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகமாக உள்ள நிலையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.  

ALSO READ:Paytm IPO: முதலீடு செய்ய ஆர்வம் காட்டும் மக்கள், வல்லுனர்களின் கணிப்பு என்ன? 

இன்றைய தங்கம் விலை நிலவரம்:  சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.71 குறைந்து ரூ. 4534 என்ற விலைக்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.548 குறைந்து ரூ.36,272 என்ற விலைக்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் தூய தங்கத்தின் விலை, பவுனுக்கு ரூ.624 குறைந்து ரூ.39,568 என்ற விலைக்கு விற்பனையாகிறது.  நேற்று 8 கிராம் தங்கத்தின் விலை ரூ.40,192 என்ற விலைக்கு விற்பனை ஆனது.

மிஸ்டு கால் கொடுத்து தங்கத்தின் விலையைக் கண்டறியலாம்

வீட்டிலிருந்தபடியே தங்கத்தின் விலையை நீங்கள் எளிதாகக் கண்டறியலாம். விலைகளை தெரிந்துகொள்ள 8955664433 என்ற எண்ணுக்கு மிஸ்ட் கால் அளிக்க வேண்டும். அதன் பிறகு உங்கள் தொலைபேசியில் ஒரு செய்தி வரும். அதில் நீங்கள் சமீபத்திய கட்டணங்களைச் சரிபார்க்கலாம்.

ALSO READ:Gold Hunt: தங்கப் புதையலை கண்டுபிடித்த இந்தோனேசிய மீனவர்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More