Home> India
Advertisement

மகாத்மா காந்தி மற்றும் லால் பகதூர் சாஸ்திரி மரியாதை செலுத்திய பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) டெல்லியில் காந்தி மற்றும் லால் பகதூர் சாஸ்திரியின் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தி வணங்கினார்.

மகாத்மா காந்தி மற்றும் லால் பகதூர் சாஸ்திரி மரியாதை செலுத்திய பிரதமர் மோடி

புதுடில்லி: இந்தியாவின் இரண்டு பெரிய நபர்களின் பிறந்த நாளை இன்று (அக்டோபர் 2) நாட்டு மக்கள் கொண்டாடி வருகின்றனர். இன்று தேசத்தின் தந்தை மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் மற்றும் நாட்டின் இரண்டாவது பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் 116வது பிறந்த நாள் ஆகும். இந்த சிறப்பான நாளில் நாடு முழுவதும் பல இடங்களில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினார். அதன்பின்னர் விஜய் காட்டில் அமைந்துள்ள நாட்டின் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் நினைவுத்தளத்திற்கு சென்று பிரதமர் மோடி மலர்தூவி வணங்கினார்.

அவருடன் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, டெல்லி லெப்டினன்ட் கவர்னர் அனில் பைஜல், மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல் மற்றும் ஹர்தீப் பூரி ஆகியோரும் மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு தேசத்தந்தைக்கு மரியாதை செலுத்தினர். இதன் பின்னர், பிரதமர் மோடி மற்றும் மக்களவைத் சபாநாயகர் ஆகியோரும் ராஜ்காட்டில் நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதற்கு முன்னதாக, காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மற்றும் பாஜகவின் செயல் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரும் காந்தியின் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தினர்.

இன்று காலை, பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் விழாவிற்கு வணக்கம்... "மகாத்மாவின் கனவை நிறைவேற்ற தொடர்ந்து கடுமையாக உழைப்பேன்" என்றும், மனிதகுலத்திற்கு காந்திஜியின் பங்களிப்புக்கு நாங்கள் எப்போதும் நன்றியுள்ளவர்களாக இருப்போம் என ட்வீட் செய்துள்ளார். அதனுடன், காந்திஜியின் வீடியோவையும் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார்.

அதேபோல பிரதமர் நரேந்திர மோடி சாஸ்திரிஜியை நினைவுகூர்ந்து ட்வீட் செய்துள்ளார். அதில் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரிஜிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்றும், அவரின் முக்கிய கோசமாக "ஜெய் ஜவான் ஜெய் கிசான்" எனவும் பதிவிட்டுள்ளார்.

Read More