Home> India
Advertisement

இலவச உணவு தானியங்கள்: ரேஷன் அட்டை தாரர்களுக்கு பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பு

Free Ration Scheme: ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. இலவச ரேஷன் குறித்த முக்கிய அறிவிப்பை மோடி அரசு அறிவித்துள்ளது.

இலவச உணவு தானியங்கள்:  ரேஷன் அட்டை தாரர்களுக்கு பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பு

PMGKAY: ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மீண்டும் ஒரு மகிழ்ச்சியான செய்தி மோடி அரசிடமிருந்து வந்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் புதன்கிழமை (செப்டம்பர் 28) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKAY) மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த திட்டத்தின் கீழ், ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் டிசம்பர் வரை இலவச ரேஷன் பலனைப் பெறுவார்கள்.

பி.எம்.ஜி.கே.ஒய் திட்டம் டிசம்பர் 2022 வரை நீட்டிப்பு

பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் மார்ச் 2020ல் கோவிட் காலத்தில் ஏழை குடும்பங்கள் உணவுப் பொருள்கள் இல்லாமல் பட்டினியால் இருக்கக்கூடாது என்பதற்காக மத்திய அரசால் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் இந்தத்திட்டம் படிப்படியாக நீட்டிக்கப்பட்டு, அதாவது மார்ச் 2022-ல் பி.எம்.ஜி.கே.ஒய் திட்டம் ஆறு மாதங்களுக்கு செப்டம்பர் வரை நீட்டிக்கப்பட்டது. இப்போது தற்போது மத்திய அரசாங்கம் மீண்டும் மூன்று மாதங்களுக்கு டிசம்பர் 2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும், சில ஊடகங்கள் இந்த திட்டம் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. 

மேலும் படிக்க: 7th Pay Commission பம்பர் செய்தி: 4% உயர்ந்தது அகவிலைப்படி, மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்

ஒரு நபருக்கு 5 கிலோ கூடுதல் உணவு தானியங்கள்

மத்திய அரசின் இந்த அறிவிப்பை அடுத்து, 80 கோடி மக்கள் நேரடியாக பயன்பெறுவார்கள். இத்திட்டத்தின் காலத்தை மேலும் நீட்டிக்க அரசு ஆலோசனை செய்து வருவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது. மத்திய உணவுத் துறை செயலாளரும் இதை குறிப்பிட்டிருந்தார். இந்த திட்டத்திற்காக இதுவரை ரூ.3.40 லட்சம் கோடி செலவிடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மத்திய திட்டத்தின் கீழ், நாட்டில் உள்ள அனைத்து ஏழை குடும்ப அட்டைதாரர் குடும்பங்களுக்கும் ஒரு நபருக்கு 5 கிலோ ரேஷன் வழங்கப்படுகிறது. ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு நபருக்கு 5 கிலோ கூடுதல் உணவு தானியங்களை (அரிசி / கோதுமை) இலவசமாக மத்திய அரசு வழங்கி வருகிறது.

பிரதமர் கரிப் கல்யாண் யோஜனா என்றால் என்ன?

பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (பி.எம்.ஜி.கே.ஒய்) நலத்திட்டத்தின் கீழ், நாட்டின் 80 கோடிக்கும் அதிகமான ஏழை மக்களுக்கு இலவச உணவு தானியங்கள் அரிசி அல்லது கோதுமை வழங்கப்படுகின்றன.

மேலும் படிக்க: ரேஷன் கார்டுதாரர்கள் கவனத்திற்கு, மத்திய அரசு முக்கிய அறிவிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More