Home> India
Advertisement

எல்கேஜி முதல் பி.ஹெச்.டி வரை மாணவிகளுக்கு இலவச கல்வி - அமரீந்தர் சிங் அறிவிப்பு

பஞ்சாப் மாநிலத்தில் எல்கேஜி முதல் பி.ஹெச்.டி வரை மாணவிகளுக்கு இலவச கல்வி வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார்.

எல்கேஜி முதல் பி.ஹெச்.டி வரை மாணவிகளுக்கு இலவச கல்வி - அமரீந்தர் சிங் அறிவிப்பு

பஞ்சாப்: பஞ்சாப் மாநிலத்தில் எல்கேஜி முதல் பி.ஹெச்.டி வரை மாணவிகளுக்கு இலவச கல்வி வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார்.

இதைக்குறித்து பஞ்சாப் சட்டப் பேரவையில் அவர் வெளியிட்ட அறிக்கையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-

* விவசாயிகள் பெற்ற 2 லட்சம் ரூபாய் வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி

* 10 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள்.

* தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பத்துக்கான நிவாரணத் தொகை 3 லட்ச ரூபாயிலிருந்து 5 லட்சமாக உயர்வு.

* எல்கேஜி முதல் பி.ஹெச்.டி வரை மாணவிகளுக்கு இலவச கல்வி வழங்கப்படும்.

* பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடும் பெண்களுக்கான இட ஒதுக்கீடு  33 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தப்படும். 

அண்மையில் நடைபெற்ற பஞ்சாப் மாநிலத்தில் சட்டசபை தேர்தலில் கேப்டன் அமரீந்தர் சிங் தலையிலான காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Read More