Home> India
Advertisement

Fact Check: காந்தி படம் அருகில் பச்சை நிற ஸ்ட்ரிப் இருக்கும் நோட்டு போலியானதா..!!

சமூக வலைதளங்களில் பரவி வரும் புதிய வீடியோவின் மூலம், 500 ரூபாய் நோட்டில் மகாத்மா காந்தியின் படத்திற்கு அருகில் பச்சை நிற பட்டை அதாவது ஸ்ட்ரிப் இருந்தால், அது போலி நோட்டு என்ற தகவல் வேகமாக பரவி வருகிறது. 

Fact Check: காந்தி படம் அருகில் பச்சை நிற ஸ்ட்ரிப் இருக்கும் நோட்டு போலியானதா..!!

புதுடெல்லி: கள்ள நோட்டுகள் குறித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களால் சமூக வலைதளங்கள் தினமும் மிகவும் அதிக அளவில் அப்ரப்படுகின்றன. பல இணையதளங்கள் மற்றும் ட்விட்டர் கணக்குகளில் போலி நோட்டுகள் மற்றும் நாணயங்களை அடையாளம் காணும் ‘விதத்தை’ பற்றி பாடம் எடுக்கின்றன. அந்த வகையில், கடந்த சில நாட்களாக  ஒரு வதந்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 

தற்போது வைரலாகும் ஒரு புதிய வீடியோவில், 500 ரூபாய் நோட்டில் மகாத்மா காந்தியின் படத்திற்கு அருகில் பச்சை நிற பட்டை இருந்தால், அது போலி நோட்டு என்ற தக்வல் பரவி வருகிறது. வழக்கமாக, ‘உண்மையான’ நோட்டுகளில் ரிசர்வ் வங்கி ஆளுநரின் கையொப்பத்திற்கு அருகில் தான் பச்சை நிற ஸ்ட்ரிப் இருக்கும் என்று வீடியோவில் கூறப்பாட்டுள்ளது.

fallbacks

இத்தகைய நோட்டுக்கள் போலியானதா? உண்மை என்ன..!!

வதந்திகளுக்கு மத்தியில், PIB தனது தகவல் சர்பார்ப்பு கணக்கான PIB Fact Check என்னும் கணக்கில், இந்த தக்வல் வெறும் வதந்தி என்றும் இரண்டு வகை நோட்டுக்களும் சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் என ட்வீட் செய்தது. மேலும் வைரலகௌம் அந்த வீடியோ போலியானது என்றும் அந்த ட்வீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PIB Fact Check, திட்டவட்டமாக, இரண்டு வகையான நோட்டுகளும் உண்மையான கரன்சி நோட்டுகள் என்று உறுதி கூறியது. இந்திய ரிசர்வ் வங்கி வழங்கிய PDF கோப்பையும் PIB இணைத்துள்ளது. அதன் மூலம் உண்மையான மற்றும் போலி ரூபாய் நோட்டுக்களை வேறுபடுத்த மக்களுக்கு உதவுகிறது.

fallbacks

PIB Fact Check மூலம் உண்மைத் தகவல்களை எப்படி பெறுவது?
PIB போலியான, உண்மைக்கு புறம்பாம், பொய் செய்திகளை பரப்பும் படங்கள், வீடியோக்கள் மற்றும் கட்டுரைகளை  தங்களுக்கு அனுப்பி வைக்குமாறு மக்களிடம் கூறுகிறது. அதன் உண்மை தன்மையை ஆராய்ந்து பின்னர் ஆதாரத்துடம் விளக்கம் வெளியிடப்படும். 

www.factcheck.pib.gov.in  என்ற வலைதளத்திற்கு சென்று படம் அல்லது வீடியோவைப் பதிவேற்றவும். அல்லது, +91-8799711259 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கும் படம் அல்லது வீடியோவை அனுப்பலாம். அல்லது, pibfactcheck@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் மூலம் கோப்புகளை அனுப்பலாம். 

ALSO READ | ’ஒமிக்ரானை எதிர்கொள்ள ஆயத்தமாவோம்’ பிரதமர் மோடி உரை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More