Home> India
Advertisement

தில்லி கலவரத்தில் பங்கு குறித்த விசாரணையை தவிர்க்கும் Facebook நிறுவனம்..!!!

ஆம் ஆத்மி கட்சி (AAP) எம்எல்ஏ ராகவ் சத்தா தலைமையிலான குழு நடத்திய விசாரணையைத் தவிர்த்தது தொடர்பாக பேஸ்புக் நிறுவனத்திற்கு "இறுதி எச்சரிக்கையை" வழங்குவதாக சட்டமன்ற குழு கூறியது.

தில்லி கலவரத்தில் பங்கு குறித்த விசாரணையை தவிர்க்கும் Facebook நிறுவனம்..!!!

டெல்லி சட்டமன்றத்தின் "அமைதி மற்றும் நல்லிணக்கம்" குழு, செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 15) மேற்கொண்ட விசாரணையில் பேஸ்புக்(Face book)  குழு கலந்து கொள்ளவில்லை. பேஸ்புக் நிறுவன ஏற்கனவே நாடாளுமன்ற குழுவின் முன் 
ஆஜரானதாக பேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது.

ஆம் ஆத்மி கட்சி (AAP) எம்எல்ஏ ராகவ் சத்தா (Raghav Chaddha) தலைமையிலான குழு நடத்திய விசாரணையைத் தவிர்த்தது தொடர்பாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட பேஸ்புக் (Face book)  நிறுவனத்திற்கு "இறுதி எச்சரிக்கையை" வழங்குவதாக சட்டமன்ற குழு கூறியது.

டெல்லி கலவரத்தில் அதன் பங்கு குறித்து பேஸ்புக் இந்தியா துணைத்தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் அஜித் மோகன் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்.

பேஸ்புக் (Face book)  குழு விசாரணைக்கு ஆஜராக மறுப்பது டெல்லி கலவரங்களில் அதன் பங்கு தொடர்பான முக்கிய உண்மைகளை மறைக்கும் முயற்சியாகும். இப்போது புதிய சம்மன் வழங்கப்படும்," என சட்ட மன்ற உறுப்பினர் சத்தா தெரிவித்தார்.

மேலும் படிக்க | இந்தியா எதற்கும் தயாராக உள்ளது: மக்களவையில் Rajnath singh

முன்னதாக இந்த மாத தொடடக்கத்தில் பேஸ்புக் இந்தியா ஊழியர்கள், இந்தியாவில் பணிபுரிந்து கொண்டே பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறான, உண்மைக்கு புறம்பான தகவல்களை பதிவு செய்கின்றனர் என மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், பேஸ்புக் தலைமை நிர்வாகி மார்க் ஜுக்கர்பெர்க்கிற்கு (Mark Zuckerberg) அனுப்பிய கடிதத்தில் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக் இந்தியா அணியில் உள்ள பல மூத்த அதிகாரிகள் ஒரு குறிப்பிட்ட அரசியல் சித்தாந்தத்தை ஆதரிப்பவர்கள் என்ற தகவலும் தனக்கு கிடைத்துள்ளதாகவும் அவர் அக்கடிதத்தில் எழுதியிருந்தார்.

மேலும் படிக்க அரசியல் சித்தாந்தத்தின் படி பேஸ்புக் இந்தியா பாகுபாடு காட்டுகிறது : ரவி சங்கர் பிரசாத்

Read More