Home> India
Advertisement

#Aircel-Maxis case: கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்!

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது!    

#Aircel-Maxis case: கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்!

ஏர்செல் மேக்சிஸ் ஒப்பந்தத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்த குற்றச்சாட்டு தொடர்பாக சிபிஐயும் அமலாக்கத்துறையும் விசாரித்து வருகின்றன. இதில் சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் தலையிட்டதாகவும் இதன்மூலம் அவரும் அவரது நிறுவனமும் பயனடைந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவ்வழக்கில் ப.சிதம்பரமும் சேர்க்கப்பட்டுள்ளார்

இந்நிலையில், ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் தன்னை கைது செய்ய தடை கோரி ப.சிதம்பரம் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் ப.சிதம்பரத்தை ஜூன் 5 வரை கைது செய்ய இடைக்கால தடை விதித்து இருந்தது. இதையடுத்து, அமலாக்கத்துறையின் வழக்கு விசாரணையில் ப.சிதம்பரத்தை ஜூலை10-ம் தேதி கைது செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 

இதையடுத்து, ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் வாக்குமூலத்தை பதிவு செய்வதற்காக வரும் 12ம் தேதி நேரில் ஆஜராகுமாறு சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில்,டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் 2வது முறையாக விசாரணைக்கு நேற்று ப.சிதம்பரம் ஆஜரானார்.  

இந்நிலையில், இவ்வழக்கில் கார்த்தி சிதம்பரம் மீது இன்று அமலாக்கப்பிரிவு டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது. மேலும், குற்றப்பத்திரிகை மீதான வாதங்கள் ஜூலை 4-ம் தேதி நடைபெறும் என டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்து உள்ளது.

Read More