Home> India
Advertisement

தொடர்ந்து வெடிக்கும் மின்சார ஸ்கூட்டர் பேட்டரி; விஜயவாடாவில் ஒருவர் பலி

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில், ஒரு நாள் முன்பு வாங்கிய மின்சார ஸ்கூட்டரின் பேட்டரி வெடித்து சிதறியதில் ஒருவர் உயிரிழந்தார், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் பலத்த காயமடைந்தனர்.

தொடர்ந்து வெடிக்கும் மின்சார ஸ்கூட்டர் பேட்டரி; விஜயவாடாவில் ஒருவர் பலி

பெட்ரோல் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் குறிப்பாக மின்சார ஸ்கூட்டர்கள் சிறந்த மாற்றாக கருதப்பட்ட நிலையில்,  தொடர்ந்து மின்சார ஸ்கூட்டர் வெடிக்கும் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது . 

சமீபகாலமாக மின்சார ஸ்கூட்டரில் பேட்டரி வெடிக்கும் பல சம்பவங்கள் வாடிக்கையாளர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து எரிந்து உயிரிழந்த சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு மின்சார ஸ்கூட்டரில் தீப்பிடித்து 80 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.

மேலும் படிக்க | மீண்டும் தீ பிடித்த இ-பைக்: பேட்டரி வெடித்ததால் ஷோரூமில் தீ விபத்து

தற்போது ஆந்திராவின் விஜயவாடாவில் மின்சார ஸ்கூட்டரின் பேட்டரி வெடித்து சிதறியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் பலத்த காயம் அடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மின்சார ஸ்கூட்டரின் பேட்டரி படுக்கையறையில் பேட்டரி சார்ஜ் செய்யப்பட்டு இருந்த போது இந்த சம்பவம் நேரிட்டுள்ளது.  தற்போது வாடிக்கையாளர்கள் மின்சார வாகனங்கள் வாங்கவே அச்சப்படுகின்றனர்.

சார்ஜிங் செய்யப்பட்டிருந்த பேட்டரி வெடித்ததில் சிவக்குமார் என்பவர் இறந்தார். அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் பலத்த தீக்காயம் அடைந்தனர். குண்டுவெடிப்பு சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவருக்கு உதவி செய்து, காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஆனால், சிகிச்சை பலனின்றி அந்த நபர் இறந்தார். 

சிவகுமார் ஏப்ரல் 22 வெள்ளிக்கிழமையன்று தான் கார்பெட் 14 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கினார். முன்னதாக, ஹைதராபாத்தில் உள்ள நிஜாமாபாத்தில், சில நாட்களுக்கு முன்பு,  மின்சார வாகன பேட்டரியில் ஏற்பட்ட தீ விபத்தில் 80 வயது முதியவர் உயிரிழந்தார். சென்னையிலும், மின்சார வாகன பேட்டரி வெடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன.

ஸ்கூட்டர் இயங்கும் போதும் அல்லது வீட்டில் அதன் பேட்டரி சார்ஜ் செய்யப்படும் போதும், பேட்டரி காரணமாகவே எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து வருகின்றன. இதை விசாரிக்க இந்திய அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது, மேலும் ஸ்கூட்டரின் பாதுகாப்பில் ஏதேனும் சமரசம் காணப்பட்டால், நிறுவனத்திற்கு பெரும் அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இரு சக்கர மின்சார வாகன உற்பத்தியாளர்களை எச்சரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | இந்திய தட்பவெட்பத்தில் மின்சார ஸ்கூட்டர்களை வாங்குவது பாதுகாப்பானதா?

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More