Home> India
Advertisement

இந்து சகிப்புத்தன்மையை தவறாக நினைக்காதீர்கள் -தேவேந்திர பட்னாவிஸ்!

100 கோடி இந்துக்களுக்கு 15 கோடி முஸ்லிம்கள் நிகரான போட்டியை விடவும் வலிமையாக உள்ளனர் என AIMIM தலைவர் வாரிஸ் பதான் கூறியதற்கு மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வரும் பாஜக தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இந்து சகிப்புத்தன்மையை தவறாக நினைக்காதீர்கள் -தேவேந்திர பட்னாவிஸ்!

100 கோடி இந்துக்களுக்கு 15 கோடி முஸ்லிம்கள் நிகரான போட்டியை விடவும் வலிமையாக உள்ளனர் என AIMIM தலைவர் வாரிஸ் பதான் கூறியதற்கு மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வரும் பாஜக தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். 

நாக்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய பட்னாவிஸ்., பதானிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் உத்தவ் தாக்கரே அரசிடம் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்.,"வாரிஸ் பதான் அளித்த அறிக்கையை நாங்கள் கண்டிக்கிறோம், மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் மன்னிப்பு கேட்கவில்லை என்றால், அவர் மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று குறிப்பிட்டார்.

100 கோடி இந்துக்கள் நாட்டில் வசிப்பதால் சிறுபான்மையினர் பாதுகாப்பாக இருந்தனர் மற்றும் இந்தியாவில் முழு சுதந்திரத்தையும் அனுபவித்தார்கள் என்பதை பதான் புரிந்து கொள்ள வேண்டும் என்று பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். ஒரு முஸ்லீம் பெரும்பான்மை தேசத்தில் இதுபோன்ற ஒரு அறிக்கையை யாரும் சொல்லத் துணிய மாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். "இந்து சமூகம் சகிப்புத்தன்மையுடையது, ஆனால் அதன் சகிப்புத்தன்மை பலவீனமாக தவறாக கருதப்படக்கூடாது" என்றும் அவர் கூறினார்.

"பதான் தேசத்திடமும், இந்து சமூகத்திடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று அவர் கூறினார்.

முன்னதாக பிப்ரவரி 16-ஆம் தேதி வடக்கு கர்நாடகாவின் கலாபுராகியில் நடந்த குடியுரிமை எதிர்ப்பு திருத்தச் சட்டப் பேரணியில் உரையாற்றியபோது பதான் இந்த கருத்துக்களைக் கூறினார். இதனையடுத்து இந்திய தண்டனைச் சட்டத்தின் 117, 153 (கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஆத்திரமூட்டல்) மற்றும் 153A (வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல்) ஆகியவற்றின் கீழ் வாரிஸ் பதான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More