Home> India
Advertisement

'ராட்சசன்' திரைப்படத்தை பாராட்டிய திமுக தலைவர் ஸ்டாலின்!

ராட்சசன் திரைப்படத்தை பார்த்து திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்!

'ராட்சசன்' திரைப்படத்தை பாராட்டிய திமுக தலைவர் ஸ்டாலின்!

ராட்சசன் திரைப்படத்தை பார்த்து திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்!

முண்டாசுப்பட்டி திரைப்பட இயக்குனர் ராம்குமாருடன், நடிகர் விஷ்ணு மீண்டும் இணைந்துள்ள படம் ராட்சசன். காவல்துறை அதிகாரியாக விஷ்ணு நடித்துள்ள இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை அமலாபால் நடித்துள்ளார். சைக்கலாஜிக்கல் ரொமாண்டிக் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இத்திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். பி.வி.ஷங்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார், சான் லோகேஷ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

'ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி - ஸ்கைலார்க் எண்டர்டெயின்மெண்ட்' நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படம் கடந்த அக்டோபர் 5-ஆம் திரைக்கு வந்தது. இந்த திரைப்படமானது விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் திரைத்துறையினர் மட்டுமல்லாமல், அரசியல் பிரபலங்கள் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் இப்படத்தினை பார்த்து பாராட்டியுள்ளாதக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக படத்தின் நாயகன் விஷ்னு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது...

"மிக்க மகிழ்ச்சி. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது நேரத்தை எங்களுக்காக ஒதுக்கி,  ராட்சசன் திரைப்படத்தை பார்த்துவிட்டு எனது நடிப்பை பாராட்டினார். நன்றி உதயநிதி ஸ்டாலின்" என பதிவிட்டுள்ளார்.

Read More