Home> India
Advertisement

சர்வதேச யோகா தினம்: சந்திரபாபு நாயுடு யோகா பயிற்சி!

சர்வதேச யோகா தினத்தையொட்டி அமராவதியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு யோகா பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்!

சர்வதேச யோகா தினம்: சந்திரபாபு நாயுடு யோகா பயிற்சி!

சர்வதேச யோகா தினத்தையொட்டி அமராவதியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு யோகா பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்!

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியாவின் பல்வேறு இடங்களில் யோகா பயிற்சிகள் நடைபெறுகிறது. குறிப்பாக தமிழகத்தில், சென்னை, திருச்சி, கோவை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. தமிழக சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் இந்த பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அவருடன் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் இந்த யோக பயிற்சியில் பங்கேற்றுள்ளார். 

இந்நிலையில், தற்போது ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அமராவதியில் யோகா பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இதேபோன்று, சர்வதேச யோகா தினத்தையொட்டி புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி யோகா பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்த யோக பயிற்சியில் அமைச்சர்கள், காவல்துறை இயக்குநர், அரசு அதிகாரிகள், என 3,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். 

Read More