Home> India
Advertisement

சாதி, மதம் பெயரால் ஓட்டு கேட்டக்கூடாது: தேர்தல் ஆணையம்

உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டசபைக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. 

சாதி, மதம் பெயரால் ஓட்டு கேட்டக்கூடாது: தேர்தல் ஆணையம்

புதுடெல்லி: உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டசபைக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. 

இந்நிலையில் சாதி மதம் பெயர் கொண்டு வாக்குகள் வாங்க கொடாது என்று தேர்தல் ஆணையம் போட்டி இடும் அனைத்து கட்சிகளுக்கும் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரிகள்:-
 
5 மாநிலத்தில் போட்டி இடும் கட்சிகள் சாதி மதம் பெயர் கொண்டு தேர்தல் பிரசாரம் செய்வதோ அல்லது வாக்கு வாங்குவது போன்றவை மேற்கொள்ளக்கூடாது என்று கூறியுள்ளது. அத்துமீறி இதை செய்தால் நடத்தை விதிகள் மீறல் என்று கருத்தப்படுவர்.

சாதி, மதத்தின் பெயரால் வாக்கு கேட்பது சட்டவிரோதம்: சுப்ரீம் கோர்ட்

தேர்தல்களில் சாதி, மதத்தின் பெயரால் வாக்கு கேட்பது சட்டவிரோதம் என்று சுப்ரீம் கோர்ட் அதிரடியாக தீர்ப்பளித்து இருந்தது. 

சுப்ரீம் கோர்ட்டில் பல ஆண்டுகாலமாக நடைபெற்று வந்தது 'இந்துத்துவா வழக்கு' அதாவது மகாராஷ்டிராவில் முதல் இந்து மாநிலம் ஏற்படுத்தப்படும் என மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் மனோகர் ஜோஷி பேசியிருந்தார். இதை எதிர்த்து என்.பி.பாட்டீல் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டின் 3 நீதிபதிகள் 1995-ம் ஆண்டு தீர்ப்பளித்தனர். அத்தீர்ப்பில், ‘இந்துத்துவா என்பது மக்களின் வாழ்க்கைமுறை. எனவே, இந்துத்தவா, இந்து கொள்கை என்ற பெயரில் ஓட்டு கேட்பதால் எந்த வேட்பாளருக்கும் பாதிப்பில்லை என தெரிவிக்கப்பட்டது.

இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. கடந்த 2014-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டின் 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்தது. அப்போது 7 நீதிபதிகள் கொண்ட பெஞ்சுக்கு இம்மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை மாற்றப்பட்டது.

மேலும் தேர்தல்களில் மதத்தை பயன்படுத்தியதாக தொடரப்பட்ட பல வழக்குகளும் இதனுடன் சேர்க்கப்பட்டன. இதன் மீதான விசாரணை கடந்த அக்டோபர் மாதம் சுப்ரீம் கோர்ட்டில் தொடங்கியது. 

தேர்தல்களில் மதத்தின் பெயரால் வாக்கு கேட்பது என்பது சட்டப்படி தவறு. சாதி, மதத்தின் பெயரால் வாக்குகளை கேட்பது சட்டவிரோதமானது. தேர்தல் என்பது மதச்சார்பற்றது ஆகையால் அதில் மதத்தை ஒருபோதும் கலக்கக் கூடாது என தீர்ப்பளிக்கப்பட்டது.

Read More