Home> India
Advertisement

இஸ்லாமியர்கள் போராட்டம்... வீடுகளை இடித்த யோகி ஆதித்யநாத் அரசு

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை கருத்து பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியவர்களின் வீடுகளை யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு இடித்தது.

இஸ்லாமியர்கள் போராட்டம்... வீடுகளை இடித்த யோகி ஆதித்யநாத் அரசு

தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்ற பாஜக செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் ஷர்மா நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அவரது இந்தப் பேச்சு உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இஸ்லாமிய நாடுகள் இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்துவருவதோடு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டுமெனவும் வலியுறுத்திவருகின்றன.

இதற்கிடையே நிலைமை கைமீறி போனதை உணர்ந்துகொண்ட பாஜக தேசிய தலைமை நுபுர் ஷர்மாவை அந்தப் பதவியிலிருந்து நீக்கி கட்சியிலிருந்து இடை நீக்கமும் செய்தது.சூழல் இப்படி இருக்க நுபுர்ஷ் ஷர்மா கருத்துக்கு டெல்லியை சேர்ந்த பாஜக நிர்வாகி நவீன் குமார் ஆதரவு தெரிவிக்கும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து பின்னர் அதை நீக்கினார்.

ஒரு நாட்டை ஆளும் ஆளுங்கட்சியின் நிர்வாகிகள் இப்படியா மதவெறியோடு பேசுவார்கள் என பலர் தங்களது எதிர்ப்பை தெரிவித்துவருகின்றனர். மேலும், அவர்களை கைது செய்ய வேண்டுமெனவும் இந்தியா முழுவதும் போராட்டங்களும் வலுத்துவருகின்றன. 

fallbacks

அந்தவகையில் உத்தரப் பிரதேசத்திலும் போராட்டம் நடைபெற்றது. அம்மாநிலத்தின் லக்னோ, பிரக்யாராஜ், மொரதாபாத் உள்ளிட்ட இடங்களில் கடந்த வெள்ளிக்கிழமை இஸ்லாமியர்கள் சார்பில் போராட்டங்கள் நடந்தன. அப்போது போராட்டக்காரர்கள் காவல் துறை வாகனங்களுக்கு தீ வைத்தும், கல் வீச்சில் ஈடுபட்டதாகவும் காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது. 

இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது வன்முறையில் ஈடுபட்டதாக போராட்டத்தில் ஈடுபட்ட 304 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். 

மேலும் படிக்க | நபிகள் குறித்த சர்ச்சை... வெடித்த கலவரம் - 6 துப்பாக்கி குண்டுகள் உடலை துளைத்தும் உயிர்பிழைத்த இளைஞர்

அதுமட்டுமின்றி இவர்களில் 2 பேருடைய வீடுகள் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளதாக கூறி கடந்த 11ஆம் தேதி இடிக்கப்பட்டன. அதேபோல் பிர்யாக்ராஜில் இருக்கும் ஒருவரது வீடு ஜேசிபி வாகனம் மூலம் நேற்று இடிக்கப்பட்டது.

 

இந்த வீட்டினை இடிக்கும்போது பலத்த காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. நேற்று இடிக்கப்பட்டவரின் வீடுதான் போராட்டத்திற்கு மூளையாக செயல்பட்டவரின் வீடு எனவும், அவர் ஜேஎன்யூ மாணவர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

போராட்டம் நடத்தியவர்களின் வீடுகளை ஒரு மாநில அரசே இடித்தது கடுமையான கண்டனத்திற்குரியது என நாடு முழுவதும் பலர் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More