Home> India
Advertisement

துரோகிகளை சுட்டுத்தள்ளுவோம்! மத்திய அமைச்சரின் சர்ச்சை முழக்கம்

துரோகிகளை சுட்டுத்தள்ளுவோம் என பிரசாரத்தில் அனுராக் தாக்கூர் கோஷம் எழுப்புயது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 

துரோகிகளை சுட்டுத்தள்ளுவோம்! மத்திய அமைச்சரின் சர்ச்சை முழக்கம்

துரோகிகளை சுட்டுத்தள்ளுவோம் என பிரசாரத்தில் அனுராக் தாக்கூர் கோஷம் எழுப்புயது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 

டெல்லி சட்டசபைக்கு பிப்ரவரி 8ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து பாஜக, ஆளும் ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட மூன்று கட்சிகள் நடுவே கடும் போட்டி நிலவுகிறது. பிரச்சாரம் தீவிரமாகி உள்ளது.

இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர், "துரோகிகளை தோட்டாவால் சுட்டு தள்ளுங்கள்" என முழக்கத்தை முன் வைத்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்த கபில் மிஸ்ரா உள்பட வேறு சில பாஜ தலைவர்களும் அனுராக் தாக்கூர் போலவே, கோஷம் போட, கூட்டமும், அதேபோல திருப்பிக் கூறியது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில், காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் முறைப்படி புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

டெல்லி தலைமை நிர்வாக அதிகாரி அலுவலகத்தில் மூத்த அதிகாரி ஒருவர் பி.டி.ஐ.க்கு பேட்டிஅளித்ததில், இந்த சம்பவத்தை நாங்கள் அறிந்துகொண்டு மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை கோரியுள்ளோம். இருப்பினும், இதுவரை எங்களுக்கு எந்த புகாரும் வரவில்லை என்று தெரிவித்துள்ளார்.

மாடல் டவுன் தொகுதியில் பாஜக வேட்பாளராக களமிறங்கியுள்ள கபில் மிஸ்ரா கடந்த மாதம் இதே போன்ற ஒரு கோஷத்தை முன்வைத்தார். இருப்பினும் அவரது பேச்சுக்கும் கட்சிக்கும் தொடர்பில்லை என்று பாஜக தலைமை தெரிவித்து விட்டது. ஆனால் இந்த கோஷம் முன்வைக்கப்பட்ட பிறகுதான், பாஜக சார்பில் போட்டியிட டிக்கெட் வழங்கப்பட்டது.

இந்நிலையில் மத்திய அமைச்சரின் சர்ச்சைக்குரிய இந்த பேச்சு, டெல்லி தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது பேச்சு நேற்று சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது.

Read More