Home> India
Advertisement

ஆதாரை கட்டாயமாக்க கெடு நீட்டிப்பு!

ஆதாரை கட்டாயமாக்க கெடு நீட்டிப்பு!

செப்டம்பர் 30-ம் தேதிக்குள் அரசின் சமூக நல திட்டங்களை பெற ஆதார் எண்ணை இனைப்பது கட்டாயம் என மத்திய அரசு ஏற்கனவே கூறி இருந்தது. மேலும் இதற்க்கான காலக்கெடுவை நீட்டிக்கும் எண்ணம் ஏதும் இல்லை எனவும் கூறி இருந்தது.

நீண்ட நாளாக இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் பதிலளிக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. 

இந்நிலையில் இன்று இந்த  வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு அளித்துள்ள பதிலில், சமூக நல திட்டங்களின் பயன்களை பெறுவதற்கு ஆதார் கட்டாயம் என்பதற்கான கால கெடுவை டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. ஏற்கனவே நவம்பர் முதல் வாரத்தில்ஆதார் தொடர்பான பிரச்சினைகள் தொடர்பான அனைத்து மனுக்களும் விசாரிக்கப்படும் என்று சுப்ரீம் கொஎர்ட் புதன்கிழமை அன்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Read More