Home> India
Advertisement

ஒடிசாவில் கரையை கடந்தது அதி தீவிர யாஸ் புயல்

புயல் பாதிப்பு உள்ள பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

ஒடிசாவில் கரையை கடந்தது அதி தீவிர யாஸ் புயல்

மத்திய கிழக்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிக்கிறது. இந்த தகவலை கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. மேலும் இந்த காற்றழுத்த தாழ்வின் காரணமாக தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.

இந்நிலையில் வங்க கடலில் உருவான யாஸ் புயல் (Cyclone Yaas), அதி தீவிர புயலாக வலுப்பெற்று, ஒடிசா எல்லையில் பாலசோருக்கு 20 கிலோ மீட்டருக்கு தெற்கே இன்று கரை கடந்தது. புயல் கரை கடந்தபோது மணிக்கு 130 கிமீ முதல் 140 கிமீ வரை வேகத்தில் சூறைக்காற்று சுழன்று அடித்தது. இதனால் அங்கு பலத்த காற்றுடன் கனமழை பெய்கிறது. 

புயல் (Cyclone) பாதிப்பு உள்ள பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் மீட்கப்பட்டு அரசின் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. அவற்றை மீட்புக் குழுவினர் உடனடியாக அப்புறப்படுத்தினர். 

ALSO READ | Cyclone Yaas: ஒடிசா, மேற்கு வங்காளத்தில் சூறாவளியை எதிர்கொள்ள தயாராகும் இந்திய ராணுவம்

யாஸ் புயல் காரணமாக மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா, துர்காபூர், ஒடிசாவின் புவனேஸ்வர், ஜார்சுகுடா, ரூர்கேலா விமான நிலையங்கள் மூடப்பட்டன. வர்த்தக விமானங்கள் எதுவும் இயக்கப்படவில்லை. யாஸ் புயல் பாலசோருக்கு தெற்கே ஒடிசா எல்லையில் கரை கடக்கிறது. இதன் காரணமாக வடக்கு ஒடிசா மற்றும் கடலோர ஒடிசாவில் இன்று அதீத கன மழை பெய்யும். மேற்கு வங்காளத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். ஜார்க்கண்ட், பீகார், சிக்கிமில் தொலைதூர இடங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும்.

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More