Home> India
Advertisement

Nasal-vaccine: கொரோனா பூஸ்டர் தடுப்பு மருந்தை மூக்கில் போட்டுக் கொள்ளவது சுலபம்!

Nasal vaccine on CoWIN app: கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அனைவரும் பூஸ்டர் தடுப்பூச்சி போட்டுக் கொள்வது அவசியம்! மூக்கு வழியாக கொடுக்கப்படும் கோவிட் தடுப்பு மருந்து செலுத்துவது சுலபம்

Nasal-vaccine: கொரோனா பூஸ்டர் தடுப்பு மருந்தை மூக்கில் போட்டுக் கொள்ளவது சுலபம்!

நியூடெல்லி: பாரத் பயோடெக்கின் நாசி வழி கோவிட் தடுப்பூசி இப்போது CoWIN செயலியில் பூஸ்டர் டோஸாக கிடைக்கிறது. அண்டை நாடான சீனாவில் கோவிட் வழக்குகள் அதிகரித்து வருவதால், ஆக்ஸிஜன் உருளைகள், வென்டிலேட்டர்கள், தளவாடங்கள், மனித வளங்கள் என கோவிட் பாதிப்பு இந்தியாவில் மீண்டும் தொற்றாமல் இருக்க மத்திய அரசு முக்கிய கவனம் செலுத்தி வருகிறது. இது தொடர்பாக பல அறிவுறுத்தலை வெளியிட்டுள்ள மத்திய சுகாதாரத் துறை, கொரோனா பரிசோதனை மற்றும் வைரஸின் மரபணு சோதனைகளை தீவிரப்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

கோவிட் வழக்குகள் அதிகரிக்காமல் தடுப்பதற்குத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் இந்தியா எடுத்து வரும் நிலையில், மக்கள் ஒத்துழைத்தால் கொரோனாவின் அச்சத்தை முளையிலேயே கிள்ளி எறிந்துவிடலாம், யாரும் பீதி அடையத் தேவையில்லை என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் படிக்க | புதிய வகை கொரோனா - மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத் துறை கடிதம்

பாரத் பயோடெக் உருவாக்கிய இன்ட்ராநேசல் கோவிட் தடுப்பூசி (intranasal Covid vaccine), CoWIN இணையதளத்தில் பொதுமக்களுக்குக் கிடைக்கும், கண்காணிப்பை முடுக்கிவிட்டுள்ள இந்திய அரசு, COVID-19 அலை வந்தாலும், அதனை எதிர்கொள்ளத் தயாராகிறது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அங்கீகரிக்கப்பட்ட நாசி தடுப்பூசி, ஒரு பூஸ்டர் டோஸாகப் பயன்படுத்தப்படலாம். தனியார் சுகாதார நிலையங்களிலும் இது கிடைக்கும்.

கொரோனா தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் இது ஒரு பெரும் ஊக்கத்தைக் கொடுக்கும். பாரத் பயோடெக்கின் ChAd36-SARS-CoV-S கோவிட்-19 (chimpanzee adenovirus vector) மறுசீரமைப்பு நாசி தடுப்பூசி மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டது.

மேலும் படிக்க | கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

இதுவரை, சுமார் 22.35 கோடி பூஸ்டர் டோஸ்கள் நாட்டு மக்களுக்கு போடப்பட்டுள்ள நிலையில், அது மேலும அதிகரிக்கப்பட வேண்டும் என்று அரசு விரும்புகிறது. நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 27 சதவீதம் பேர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ள தகுதி பெற்றுள்ளனர். முதல் மற்றும் இரண்டாவது டோஸ் கவரேஜ் தற்போது முறையே 97 சதவீதம் மற்றும் 90 சதவீதமாக உள்ளது.

மூக்கு தடுப்பூசி, பாரத் பயோடெக்கின் முந்தைய தடுப்பூசியான கோவாக்சின் போன்றது, பொது-தனியார் கூட்டாண்மையின் விளைவாகும். இது பாரத் பயோடெக் மற்றும் பயோடெக்னாலஜி துறை (DBT) மற்றும் அதன் PSU, பயோடெக்னாலஜி இண்டஸ்ட்ரி ரிசர்ச் அசிஸ்டன்ஸ் கவுன்சில் (BIRAC) ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும்.

மேலும் படிக்க | COVID Horror: விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா அலை! புத்தாண்டை பதம் பார்க்கும் கோவிட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More