Home> India
Advertisement

திகிலைக் கிளப்பும் கொரோனா தொற்று: 24 மணி நேரத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை இப்போது 1.25 கோடியாக உயர்ந்துள்ளது. அவற்றில் சுமார் 1.16 கோடி பேர் குணமடைந்துள்ளனர்.

திகிலைக் கிளப்பும் கொரோனா தொற்று: 24 மணி நேரத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

புதுடில்லி: கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1 லட்சத்துக்கும் மெற்பட்டோர் கோவிட் -19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது கொரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கியதிலிருந்து அதிகபட்ச ஒற்றை நாள் உயர்வாகும். ஒரு வாரம் முன்பு மத்திய அரசு எச்சரித்ததைப் போல, நாட்டின் நிலைமை இப்போது 'மோசமான நிலையில் இருந்து மிகவும் மோசமான நிலைக்கு' சென்றுவிட்டது என தோன்றுகிறது. திங்களன்று (ஏப்ரல் 5, 2021) வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1,03,558 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்தியாவில் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 7.41 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இறப்பு எண்ணிக்கை 1.65 லட்சமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை இப்போது 1.25 கோடியாக உயர்ந்துள்ளது. அவற்றில் சுமார் 1.16 கோடி நோயாளிகள் குணமடைந்துள்ளனர். 
COVID-19 தொற்று நிலைமை மற்றும் தடுப்பூசி திட்டத்தை மறுஆய்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி ஒரு உயர்நிலை கூட்டத்தை நடத்திய அடுத்த நாள், நாளொன்றுக்கு 1 லட்சத்துக்கு மேற்பட்ட தொற்று என்ற எண்ணிக்கை எட்டப்பட்டுள்ளது. 

நிலையான COVID-19 நிர்வாகத்தைப் பொறுத்தவரை, சமூகம் குறித்த விழிப்புணர்வும் அதன் ஈடுபாடும் மிக முக்கியமானது என்றும், COVID-19 நிர்வாகத்திற்காக மக்களின் ஈடுபாடு மற்றும் மக்களின் விழிப்புணர்வு ஆகியவற்றைத் தொடர வேண்டிய அவசியம் உள்ளது என்றும் அவர் கூறினார்.

பரிசோதனை, தடமறிதல், சிகிச்சை, கோவிட்-19-க்கு பொருத்தமான நடத்தை மற்றும் தடுப்பூசி (Vaccination) ஆகியவற்றைக் கொண்ட ஐந்து அம்ச செயலுத்தி அர்ப்பணிப்புடனும் செயல்படுத்தப்பட்டால், வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதில் மிகப் பெரிய வெற்றி கிடைக்கும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

ALSO READ: மகிழ்ச்சியான செய்தி! coronavirusஐ எதிர்க்கும் நோயெதிர்ப்பு சக்தியுடன் பிறந்த குழந்தை...

வரவிருக்கும் நாட்களில் COVID பொருத்தமான நடவடிக்கைகளை அமல்படுத்த வேண்டியதன் அவசியத்தையும், மருத்துவமனையில் படுக்கைகள் கிடைப்பது, சோதனை வசதிகள் மற்றும் சரியான நேரத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்படுவது போன்றவற்றை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் மோடி எடுத்துரைத்தார். தேவையான தளவாடங்கள், மற்றும் அனைத்து மருத்துவமனைகள் மற்றும் வீட்டு பராமரிப்பாளர்களுக்கும் மருத்துவ நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் பிரதமர் கூறினார். 

ஏப்ரல் 6 முதல் 14 வரை, 100% முகக்கவச பயன்பாடு (Facemask), பொது இடங்கள், பணியிடங்கள் மற்றும் சுகாதார மையங்களில் தனிப்பட்ட சுகாதார நடவடிக்கைகள் பற்றி வலியுறுத்தும் ஒரு சிறப்பு பிரச்சாரமும் மேற்கொள்ளப்படும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பொது சுகாதார வல்லுநர்கள் மற்றும் மருத்துவர்களைக் கொண்ட மத்திய குழுக்கள் மகாராஷ்டிராவிற்கு அனுப்பப்பட வேண்டும் என்றும், அதேபோல் பஞ்சாப் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கும் இவை  அனுப்பப்படும் என்றும் பிரதமர் மோடி உத்தரவிட்டார். இந்த மூன்று மாநிலங்களும் கடந்த சில வாரங்களில் மிக மோசமான முறையில் COVID-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களாகும். 

பிரதமரின் சந்திப்பின் போது, ​​ஒரு விரிவான விளக்கக்காட்சி வழங்கப்பட்டது, இது நாட்டில் COVID-19 தொற்று பரவல் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கையில் அபாயகரமான விகிதம் இருப்பதை எடுத்துக்காட்டியது.

ALSO READ: 24 மணி நேரத்தில் 93,000 பேருக்கு கொரோனா தொற்று: அவசர கூட்டத்தைக் கூட்டினார் பிரதமர் மோடி

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Read More