Home> India
Advertisement

DG Prisons COVID Positive: திகார் சிறையிலும் நுழைந்தான் கொரோனா என்னும் குற்றவாளி!

திகார் சிறை இயக்குநர் ஜெனரல் (சிறைச்சாலைகள்) சந்தீப் கோயலின் கொரோனா வைரஸ் பரிசோதனை முடிவுகள் பாசிடிவாக வந்துள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

DG Prisons COVID Positive: திகார் சிறையிலும் நுழைந்தான் கொரோனா என்னும் குற்றவாளி!

புதுடில்லி: இந்தியாவின் மிக பிரசித்திபெற்ற சிறைச்சாலைகளில் திகார் சிறைச்சாலை (Tihar Jail) ஒன்றாகும். கொடிய குற்றவாளிகளும் இங்கு செல்ல அஞ்சுவதுண்டு. ஆனால், கொரோனா என்னும் குற்றவாளிக்கு எதைக் கண்டும் அச்சமில்லை போலும். திகாரிலும் புகுந்து விட்டது கொரோனா.

திகார் சிறை இயக்குநர் ஜெனரல் (சிறைச்சாலைகள்) சந்தீப் கோயலின் கொரோனா வைரஸ் பரிசோதனை (Corona Test) முடிவுகள் பாசிடிவாக வந்துள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

முன்னதாக, திகார் மத்திய சிறை எண் 4 இன் கண்காணிப்பாளரின் கொரோனா பரிசோதனை முடிவுகளும் நேர்மறையாக வந்தன.

மார்ச் மாதத்தில் நாட்டில் தொற்று தொடங்கியதிலிருந்து, நாட்டின் 1,350 சிறைகளில் 26% சிறைகளில் தொற்று பரவியுள்ளது என இரண்டு நாட்களுக்கு முன்பு, ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் கூறியது. மொத்தம் 1350 சிறைகளில், 25 மாநிலங்கள் / யூ.டி.க்களில் 351 சிறைகளில் ஆகஸ்ட் 31 வரை COVID-19 தொற்றுகள் பல பதிவாகியுள்ளன.

ALSO READ: COVID & டெங்குவால் பாதிக்கபட்ட துணை முதல்வருக்கு தீவிர சிகிச்சை!!

கோவிட் -19 பாதிக்கப்பட்ட சிறைகளில், 52 சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை 101 – 312 சதவீதம் அதிகமாக உள்ளன.

இதற்கிடையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் (Arvind Kejriwal) , கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலை தேசிய தலைநகரில் உச்சத்தை எட்டியுள்ளது என்று கூறியுள்ளார். வல்லுநர்கள் எதிர்வரும் நாட்களில் தொற்று எண்ணிக்கை குறையும் என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.

அரசாங்கம் இது குறித்து ஆலோசனையில் உள்ளது என்றும், AAP கட்சி எடுத்துள்ள நடவடிக்கைகளின் காரணமாக COVID-19 தொற்று "படிப்படியாக" குறையும் என்று தான் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் (Corona Virus) தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தலைநகரில் COVID-19 நோயாளிகளின் எண்ணிக்கை 2.56 லட்சத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளது. இறப்பு எண்ணிக்கை 5,087 ஆக உயர்ந்துள்ளது.

ALSO READ: COVID பரிசோதனை முடிவு Positive-வாக வந்தால் என்ன செய்ய வேண்டும்? தெரிந்துகொள்ளுங்கள்…

Read More