Home> India
Advertisement

காங்., கட்சியின் மகத்தான கடமை இப்பொழுது தான் தொடங்குகிறது...

நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தல்களில், மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் காங்., தொண்டர்களை குறைத்து மதிப்பிடாதீர் என அக்கட்சி மூத்த தலைவர் பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

காங்., கட்சியின் மகத்தான கடமை இப்பொழுது தான் தொடங்குகிறது...

நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தல்களில், மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் காங்., தொண்டர்களை குறைத்து மதிப்பிடாதீர் என அக்கட்சி மூத்த தலைவர் பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

தெலங்கானா, மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்கள் முடிவடைந்துள்ள நிலையில் மத்திய பிரதேசம், சத்தீஷ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது. தெலங்கானாவில் சந்திரசேகர ராவ் தலைமையிலான ராஷ்டிரிய சமிதி கட்சியும், மிசோரமில் மிசோ தேசிய முன்னணி கட்சியும் ஆட்சி அமைக்கின்றது.

வெளியான தேர்தல் முடிவுகளின் படி இந்த 5 மாநிலங்களிலும் பாஜக தோல்வி கண்டுள்ளது உறுதியாகியுள்ளது. இந்த முடிவுகள் மூலம் காங்கிரஸ் மீண்டெழுந்துள்ளது என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பா.சிதம்பரம் அவர்கள் ‘காங்கிரஸ் கட்சியின் அயராது பாடுபடும் தொண்டர்களை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள்’ என தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது...

"மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியைத் தந்து இந்திய அரசியல் சாதனத்தைக் காப்பாற்றிய அந்த மாநிலங்களின் வாக்காளர்களுக்கு நாடே கடமைப்பட்டிருக்கிறது.

இந்தத் தேர்தல்கள் கற்ப்பித்த பாடம்: காங்கிரஸ் கட்சியின் அயராது பாடுபடும் தொண்டர்களை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள்

காங்கிரஸ் கட்சியின் மகத்தான கடமை இப்பொழுது தான் தொடங்குகிறது. இன்னும் பல சிகரங்களைக் கைப்பற்றி இந்திய நாட்டைக் காப்பாற்ற வேண்டிய கடமை உள்ளது" என பதிவிட்டுள்ளார்.

Read More