Home> India
Advertisement

மோடி அரசை கண்டித்து 'பாகுபலி' ஸ்டைலில் சிலிண்டரை தூங்கிய பெண் எம்.பி

Congress Protest: மோடி அரசை கண்டித்து 'பாகுபலி' ஸ்டைலில் சிலிண்டரை தூங்கிக்காட்டி தனது தனது அதிருப்தியை வெளிப்படுத்திய பெண் எம்.பி

மோடி அரசை கண்டித்து 'பாகுபலி' ஸ்டைலில் சிலிண்டரை தூங்கிய பெண் எம்.பி

புது டெல்லி : மத்தியில் ஆட்சி செய்யும் நரேந்திர மோடி அரசை காங்கிரஸ் உட்பட எதிர்கட்சிகள் தொடர்ந்து முற்றுகையிட்டு வருகிறது. நாட்டில் அதிகரித்து வரும் எரிபொருள் விலை உயர்வு, விலைவாசிகள் உயர்வு, உணவு பொருட்கள் மீது ஜி.எஸ்.டி. வரி மற்றும் பணவீக்கம் உட்பட முக்கிய பிரச்சனைகளை மேற்கோள் காட்டி நாடாளுமன்றத்தில் காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்டிரிய சமீதி உட்பட எதிர்கட்சிகள் ஆர்ப்பாட்டம் செய்து வருகிறது. மோடி அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின்​​ போது பெண் எம்.பி., ஒருவர் காஸ் சிலிண்டரை தலைக்கு மேல தூக்கிக்காட்டி தனது அதிருப்தி தெரிவித்தார். பெண் எம்.பி ஒருவர் பாகுபலி பாணியில் கேஸ் சிலிண்டரை ஏந்தி போராட்டம் நடத்தியது பேச்சுப் பொருளாக மாறியுள்ளது.

இன்று, ராகுல் காந்தி தலைமையில், காங்கிரஸ் மற்றும் சில எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பணவீக்கம் மற்றும் ஜிஎஸ்டி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பு எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர் கூட்டாக போராட்டத்தில் கலந்துக்கொண்டனர். இந்த எம்.பி.க்கள் பணவீக்கத்திற்கு எதிராகவும், பல அத்தியாவசிய உணவுப் பொருட்களை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வருவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசாங்கத்து எதிராக கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தின் போது "விலைவாசி உயர்வால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் எப்படி வாழ்வது" என்ற வாசகத்துடன் கூடிய காஸ் சிலிண்டர் படம் பொறித்த பதாகையையும் ஏந்தியிருந்தனர்.

இந்த போராட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியைத் தவிர, ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, தெலுங்கானா ராஷ்டிர சமிதியின் நாம நாகேஸ்வர ராவ் மற்றும் கே. கேசவ் ராவ், தேசிய மாநாட்டின் ஹஸ்னைன் மசூதி, தமுமுகவின் இடி முகமது பஷீர் மற்றும் பல எதிர்க்கட்சி எம்பிக்கள் தர்ணாவில் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க: சித்தராமையா மீது பணத்தை தூக்கி எறிந்த பெண் : வைரலாகும் வீடியோ

பால், தயிர் மீதான ஜிஎஸ்டியை திரும்பப் பெறுங்கள் என எதிர்க்கட்சி எம்பிக்களும் கோஷங்களை எழுப்பினர். அப்பொழுது ​​கார்கே கூறுகையில், “இன்று அரசி, கோதுமை மாவு, தயிர் மற்றும் பல பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளது. இந்த அரசு சாமானிய மக்களுக்கு கொடுமைகளை செய்துள்ளது. மக்கள் பிரதிநிதி என்ற முறையில் இதுபோன்ற பிரச்னைகளை எழுப்புவது நமது கடமை. இதை கண்டித்து அனைத்து மாநிலங்களிலும் தொடர் போராட்டம் நடத்துவோம்" என்றார்.

செவ்வாய்க்கிழமையும் இதே விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் முற்றுகையிட்டதால் இரு அவைகளிலும் அமளி நிலவியதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. ஜிஎஸ்டி கவுன்சிலின் முடிவு அமலுக்கு வந்த பிறகு, திங்கள்கிழமை முதல் பல உணவுப் பொருட்கள் விலை உயர்ந்தன. பேக்கேஜ் செய்யப்பட்ட மற்றும் லேபிளிடப்பட்ட உணவுப் பொருட்களுக்கு 5% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது.

அதேநேரத்தில் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பும் உறுப்பினர்களை அவை விவாதத்தில் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கேட்டுக்கொண்டுள்ளார். நாடாளுமன்றம் இயங்க வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க: "வேளாண் சட்டத்தை போல அக்னிபாத் திட்டத்தையும் திரும்பப் பெற வேண்டும்" -ராகுல் காந்தி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Read More