Home> India
Advertisement

விரைவில்! ரயில் டிக்கெட் முன்பதிவு ஆதார் எண் கட்டாயம்

விரைவில்! ரயில் டிக்கெட் முன்பதிவு ஆதார் எண் கட்டாயம்

ரயில் டிக்கெட்டுகள் வாங்கு வதற்கும், கட்டண சலுகை உள்ளிட்ட சலுகைகளைப் பெறவும் ஆதார் எண்ணை கட்டாயமாக்க, ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. மிக விரைவில், இது அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடு முழுவதும், நுாறு கோடிக்கு மேற்பட்ட மக்களுக்கு ஆதார் எண் அளிக்கப்பட்டுள்ளது. ஆதார் எண்ணுடன் வங்கிக் கணக்கும் இணைக்கப்பட்டுள்ளது. சமையல் காஸ், ரேஷன் உள்ளிட்டவற்றுக்கான மானியத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இதனால், பல கோடி ரூபாய் இழப்பு தடுக்கப்பட்டுள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது. பல்வேறு சேவைகளுக்கும்  ஆதார் எண் வழங்குவதை கட்டாயமாக்க மத்திய அரசு திட்ட மிட்டது. ஆனால், இதற்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. இது தொடர்பான வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், ரயில்வேயில் அளிக்கப்படும் பல்வேறு சலுகைகள் போலியான பெயரில் சிலர் பெற்று வருகின்றனர். இதனால் ரயில்வேக்கு அதிக அளவில் இழப்பு ஏற்படுகிறது. இழப்பு ஏற்படுவதை தடுக்கவும், ஆள்மாறாட்டம் செய்து பயணம் செய்வதை தடுக்கவும், ஆதார் எண்ணை கட்டாயமாக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது.

ஆதார் கட்டாய திட்டத்தை இரண்டு கட்டங்களாக செயல்படுத்த ரயில்வே திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக, ரயில்வேயின் பல்வேறு கட்டண சலுகையைப் பெறுவதற்குஆதார் எண் கட்டாயமாக்கப்பட உள்ளது. தற்போது மூத்த குடிமக்கள், சுதந்திர போராட்ட தியாகிகள், மாற்றுத் திறனாளிகள், மாணவர்கள் என, 53 பிரிவினருக்கு, கட்டணச் சலுகை அளிக்கப்படுகிறது. இனி, இதுபோன்ற கட்டணச் சலுகையைப் பெறுவதற்கு, ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, ஆதார் எண் அளிப்பது கட்டாயமாக்கப்படுகிறது. அரசின் ஒப்புதலுக்குப் பிறகு, மிக விரைவில் இதை நடைமுறைக்கு கொண்டு வர ரயில்வே தீவிரமாக உள்ளது.

Read More