Home> India
Advertisement

யோகியின் அடுத்த அதிரடி உ.பியில் 24 மணி நேரமும் மின்சாரம்

யோகியின் அடுத்த அதிரடி உ.பியில் 24 மணி நேரமும் மின்சாரம்

உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெற்றதை அடுத்து முதல் மந்திரியாக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்றுக்கொண்டார். 

யோகி ஆதித்யநாத் பதவி ஏற்றது முதல் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற முதல் அமைச்சரவை கூட்டத்தின் போது, 35,359 கோடி மதிப்பிலான விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதற்கான அதிரடி வெளியிட்டார். 

இந்த நிலையில், யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசின் இரண்டாவது அமைச்சரவை கூட்டம் 

நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தடையில்லா மின்சாரம் வழங்கப்படுவது குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.  

இந்த கூட்டத்தில் யோகி ஆதித்யநாத் கூறியதாவது:-

மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், தினமும், 24 மணி நேரமும், கிராமங்களில், 18 மணி நேரமும் மின்விநியோகம் வழங்கப்பட வேண்டும். மாணவர்களின் நலன் கருதி கிராமப்புறங்களில் மாலை, 6:00 முதல், காலை, 6:00 மணி வரை தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என அவர் கூறினார். 

Read More