Home> India
Advertisement

ஓய்வுக்கு முன் 4 முக்கிய தீர்ப்புகளை வழங்க உள்ளார் CJI ரஞ்சன் கோகோய்

அயோத்தி தீர்ப்பை அடுத்து, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் ஓய்வு பெறுவதற்கு முன்பு, இன்னும் நான்கு முக்கிய வழக்குகளின் தீர்ப்புக்களை வழங்க உள்ளார். அது என்னனென்ன தீர்ப்புக்கள் என்று பார்ப்போம்.

ஓய்வுக்கு முன் 4 முக்கிய தீர்ப்புகளை வழங்க உள்ளார் CJI ரஞ்சன் கோகோய்

புதுடெல்லி: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மற்றும் அரசியல் ரீதியாக முக்கியமான தீர்ப்புகளில், இந்திய தலைமை நீதிபதி (Chief Justice of India) ரஞ்சன் கோகோய் (Ranjan Gogoi) தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு பெஞ்ச் (Constitution Bench), பல தசாப்தங்களாக பழமையான ராம்ஜன்மபூமி-பாப்ரி மஸ்ஜித் (Ramjanmbhoomi-Babri Masjid) வழக்கு தொடர்பான வரலாற்று தீர்ப்பை வழங்கியது. அயோத்தி வழக்கில் (Ayodhya Verdict) கடந்த சனிக்கிழமை தீர்ப்பு வழங்கியது. அதில் அயோத்தியில் (Ayodhya) உள்ள சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் (Ram Temple) கட்டுவதற்காக உச்ச நீதிமன்றம் (Supreme Court) ஒருமனதாக தீர்ப்பு வழங்கியது. அதற்காக ஒரு அறக்கட்டளை அமைத்தது, மசூதி கட்ட சுன்னி வக்ஃப் வாரியத்திற்கு ஐந்து ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் எனவும் கூறியது.

இப்போது, அயோத்தி (Ayodhya) தீர்ப்பு வெளி வந்துள்ள நிலையில், தலைமை நீதிபதி கோகோய் நவம்பர் 17 அன்று பதவியில் இருந்து ஓய்வு பெற உள்ளார். அதற்கு முன்னர் அவர் வழங்க வேண்டிய நான்கு முக்கிய தீர்ப்புகள் உள்ளன. அவர் தலைமையிலான பெஞ்ச் மூன்று நாட்களில் நவம்பர் 13 முதல் 15 வரை தீர்ப்புகளை வழங்க உள்ளது. நேற்று (திங்கள்) மற்றும் இன்று (செவ்வாய்க் கிழமை) உச்ச நீதிமன்றம் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

அவரே எந்தெந்த தீர்ப்புகள் வழங்க உள்ளார் என்று பார்போம்....!!

ரஃபேல் ஒப்பந்த மறுஆய்வு மனு (Rafale Deal Review Petition)
ரஃபேல் ஒப்பந்தத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுக்களை மே மாதம் தலைமை நீதிபதி கோகோய் தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது. இந்த மனுக்களை முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷவுரி மற்றும் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆகியோர் மறு ஆய்வு மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்க உள்ளது.

ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு (Contempt Case against Rahul Gandhi)
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக பாரதீய ஜனதா கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மீனாட்சி லேக்கி தாக்கல் செய்த அவமதிப்பு மனு மீதான தீர்ப்பை நீதிமன்றம் வழங்க உள்ளது. "சவுகிதார் சோர் ஹை" (காவலி ஒரு திருடன்) எனக் கூறிய ராகுல் காந்திக்கு எதிராக வழக்கு பதியப்பட்டது. இதற்கு ராகுல், உச்சநீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சபரிமலை மறுஆய்வு மனு (Sabarimala Review Plea)
தலைமை நீதிபதி கோகோய், ஓய்வு பெறுவதற்கு முன்னர், கேரளாவின் சபரிமலை அய்யப்பா கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் நுழைய அனுமதிக்கும் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட மறுஆய்வு மனுக்கள் குறித்து தனது தீர்ப்பை வழங்க உள்ளார்.

சி.ஜே.ஐ (CJI) அலுவலகம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வர வேண்டுமா? (CJI come under RTI?)
தகவல் அறியும் உரிமைச் (Right to Information Act) சட்டத்தின் கீழ் இந்திய தலைமை நீதிபதி அலுவலகம் வர வேண்டுமா? இல்லையா? என்பது குறித்த ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு பெஞ்ச் தீர்ப்ப்பு வழங்கும். இந்த வழக்கின் தீர்ப்பு சி.ஜே.ஐ அலுவலகம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வருமா என்பதை தீர்மானிக்கும்.

Read More