Home> India
Advertisement

சினிமா பாணியில் பிரபல பாடகி சுட்டுக்கொலை!

22 வயதான, பிரபல ஹரியானா பாடகி ஹர்ஷிட்டா தாஹியா மர்ம நபர்களால் பானிபட் நகரில் உள்ள ஈரானா கிராமத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சினிமா பாணியில் பிரபல பாடகி சுட்டுக்கொலை!

புதுடில்லி: 22 வயதான, பிரபல ஹரியானா பாடகி ஹர்ஷிட்டா தாஹியா மர்ம நபர்களால் பானிபட் நகரில் உள்ள ஈரானா கிராமத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

செய்தி நிறுவனங்களின் அறிக்கைபடி, இஸ்ரானாவில் நிகழ்ச்சி ஒன்றினை முடித்துவிட்டு வீடு திரும்பிய ஹர்ஷிட்டா தாஹியா மர்ம நபர்களை சிலரால் தாக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக, பானிபட்டின் சாம்ரா கிராமத்தை கடக்கும் போது தனது காரினை 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று மற்றொரு காரில் அவரை துரத்தியதாக காவல்துறையினரிடம் அவர் தெரிவித்துள்ளார். 

இந்த போராட்டத்தினில் அவர் தப்பிக்க முயன்றும், மர்ம நபர்கள் காரில் இருந்த அவரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளனர். இதனால் அவர் சம்பவ இடத்திலே உயிர் இழந்தார்.

தற்போது அவரது உடல் பானிபட் சிவில் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்!

Read More