Home> India
Advertisement

PM Modi உட்பட பல VIP-க்களை உளவு பார்க்கும் சீனாவின் சில்லறைத்தனம்!!

இந்திய குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் மற்றும் குறைந்தது 15 முன்னாள் ராணுவத் தலைவர்கள், கடற்படை மற்றும் விமானப்படைத் தலைவர்கள் ஆகியோர் சீன உளவு அமைப்பின் கண்காணிப்பின் கீழ் உள்ள சில முக்கிய நபர்களாவர்.

PM Modi உட்பட பல VIP-க்களை உளவு பார்க்கும் சீனாவின் சில்லறைத்தனம்!!

புதுடில்லி: LAC-ல் நடந்து வரும் இந்தியா-சீனா இடையிலான எல்லை பிரச்சனைக்கு இடையே, சீன கம்யூனிஸ்ட் கட்சி (Chinese Communist Party) 10,000 க்கும் மேற்பட்ட இந்திய தனிநபர்களையும் அமைப்புகளையும், “வெளிநாட்டு இலக்குகள்” என்ற தனது உலகளாவிய தரவுத்தளத்தின் மூலம் கண்காணித்து வருவதாக புலனாய்வு அறிக்கைகள் தெரிவித்துள்ளன.

இந்திய குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி (PM Modi), காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் மற்றும் குறைந்தது 15 முன்னாள் ராணுவத் தலைவர்கள், கடற்படை மற்றும் விமானப்படைத் தலைவர்கள் ஆகியோர் சீன உளவு அமைப்பின் கண்காணிப்பின் கீழ் உள்ள சில முக்கிய நபர்களாவர்.

இந்த அறிக்கைக்கு பதிலளித்த இந்திய அரசாங்கம் (Indian Government), சீன நிறுவனங்கள் தரவு திருட்டில் ஈடுபடுவதும், அதை, சீன ஏஜென்சிகள் (Chinese Agencies) தவறாகப் பயன்படுத்துவதும் ஏற்கனவே அறியப்பட்ட விஷயங்கள் என்பதால், இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை என்று கூறியது.

ALSO READ: ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல்..!!!

சீன நிறுவனங்கள் இப்படிப்பட்ட கீழ்தரமான செயல்களில் ஈடுபடுவதால்தான் சீன செயலிகளை தடை செய்வதற்கான முடிவு எடுக்கப்பட்டது. தமக்கே தெரியாமல் சீன நிறுவனங்களின் தரவு வங்கியில் இந்தியர்கள் தங்கள் பங்களிப்பை அளிக்கிறார்கள். அந்த தரவுகள் சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் முகவர் நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.

இந்தியாவும் சீனாவும் (China) நான்கு மாதங்களுக்கும் மேலாக, இரு நாடுகளின் எல்லைப்பகுதியான LAC-ல் மோதலில் ஈடுபட்டுள்ளன. அங்கு பதட்டமான சூழல் இன்னும் தொடரும் வேளையில் இந்த தரவு திருட்டு மற்றும் கண்காணிப்பு பற்றிய செய்திகள் வெளி வந்துள்ளன.

​​பாங்காங் ஏரியின் (Pangong Lake) தெற்கு கரையில் உள்ள இந்தியப் பகுதியை ஆக்கிரமிக்க சீனா முயற்சித்து தோல்வியுற்றதைத் தொடர்ந்து பதற்றம் அதிகரித்தது. இந்த பதற்றத்தை சரி செய்ய, இரு நாடுகளும் தூதாண்மை மற்றும் ராணுவ ரீதியான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர். இன்னும் இதற்கான உறுதியான எந்த முடிவும் எட்டப்படவில்லை. 

ALSO READ: கல்வான் தாக்குதல்: 60 சீன படையினர் கொல்லப்பட்டது அம்பலம்..!!!

Read More